[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்
  • BREAKING-NEWS அரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்
  • BREAKING-NEWS கர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்
  • BREAKING-NEWS பாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS மாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்

அறைந்த எம்.எல்.ஏ.வை பதிலுக்கு அடித்த பெண் போலீஸ்: வைரலாகும் வீடியோ

himachal-pradesh-lawmaker-asha-kumari-slaps-police-constable-receives-a-slap-in-return

தன்னை அறைந்த எம்.எல்.ஏவை தாமதிக்காமல் ஒரு பெண் போலீஸ் பதிலுக்கு அறைந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஹிமாச்சல் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது குறித்து ஆய்வு செய்வதற்கான கூட்டம் தலைநகர் சிம்லாவில் நடைபெற்றது.  காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி பங்கேற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மட்டுமின்றி கட்சியின் முக்கிய பிரமுகர்கள் பலரும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் எம்.எல்.ஏ ஆஷாகுமாரி வந்திருந்தார்.
 
அப்போது அப்பகுதியில் ஏராளமான கட்சித் தொண்டர்கள் குழுமி இருந்ததால் நெரிசல் நிலவியது. கூட்ட நெரிசல் காரணமாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் ஆஷாகுமாரியை ஆய்வுக் கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆய்வுக் கூட்ட அரங்கிற்குள் அனுமதிக்கப்படாததால் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஆஷாகுமாரி, அங்கிருந்த இளம் பெண் காவலரை திடீரென கன்னத்தில் அறைந்தார். சிறிதும் தாமதிக்காத அந்த இளம் பெண் காவலர் எம்.எல்.ஏவை பதிலுக்கு அறைந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close