[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 22 ஆம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்- அமைச்சர் துரைக்கண்ணு
  • BREAKING-NEWS நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும்
  • BREAKING-NEWS புதிய தலைமுறை செய்தி எதிரொலி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை நீர்தேக்க பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மினி லாரிகள் பறிமுதல்
  • BREAKING-NEWS புதுக்கோட்டையில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது
  • BREAKING-NEWS குமரி: பெருஞ்சாணி அணையில் உபரி நீர் திறப்பால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார்; அதற்கு நன்றி- தமிழிசை
  • BREAKING-NEWS டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வை குறைக்கக்கோரி நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம்

சபரிமலையில் சிறப்புத் தரிசனம் ரத்து

travancore-devasawom-to-stop-special-darshan-for-donators-of-annadanam-at-sabarimnala

சபரிமலைக் கோயிலில் சிறப்பு தரிசனம் முறை ரத்து செய்யப்பட்டிருப்பதாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 

சபரிமலையில் அன்னதான திட்டத்திற்கு நிதி வழங்கினால், பக்தர்கள் சிறப்பு தரிசனம் செய்யும் முறை இருந்தது. இந்நிலையில், சபரி மலைக்கு வரும் பக்தர்கள் அனைவரும் சமம் என்ற அடிப்படையி‌ல் அன்னதான திட்டத்திற்கு நன்கொடை வழங்குவோருக்கான ‌சிறப்பு தரிசன முறை ரத்து செய்யப்பட்டிருப்பதாக தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி தேவஸ்தான புதிய தலைவர் ஏ.பத்மகுமார் கூறும்போது, ‘முந்தைய நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த இந்த திட்டத்தை ரத்து செய்கிறோம். ஏற்கனவே நன்கொடை அளித்தவர்களுக்கு சிறப்பு தரிசன அனுமதி உண்டு. பக்தர்கள் அனைவரும் சமம்  என்பதை வலியுறுத்தவே இந்த நடவடிக்கை. தேவஸ்தானத்தில் பொருளாதார நெருக்கடி ஏதும் இல்லை. சபரிமலைக்கு 63 ஏக்கர் நிலம் உண்டு. ஆனால், 55 ஏக்கர்தான் போர்டு வசம் இருக்கிறது’ என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close