[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS விழுப்புரத்தில் லஞ்ச புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளரின் வங்கி லாக்கரில் ஒரு கிலோவுக்கும் அதிகமான தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
  • BREAKING-NEWS ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பந்து வீச்சு
  • BREAKING-NEWS ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் இல்லை - அப்போலோ தரப்
  • BREAKING-NEWS உலகில் 5 விநாடிக்கு ஒரு குழந்தை மரணம்- ஐநா பகீர் தகவல்
  • BREAKING-NEWS கட்டாய ஹெல்மெட், சீட்பெல்ட் வழக்கில் நாளை உத்தரவு

தமிழ்நாட்டின் 69 சதவிகித இடஒதுக்கீடுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு

file-petition-against-tn-69-percent-reservation-in-sc

தமிழகத்தில் அமலில் இருக்கும் 69 சதவிகித இடஒதுக்கீடு முறைக்கு எதிராக தமிழகத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் தாழ்த்தப்பட்டவர்கள், மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர் என்று பெரும்பான்மையான (சுமார் 85 விழுக்காடு மக்கள் தொகை) உள்ள மக்களுக்கு, இடஒதுக்கீடு கடந்த 1980 முதல் சுமார் 34 ஆண்டு காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது.

1992-ல் மண்டல் கமிஷன் பரிந்துரையை அமலாக்கியபோது, தமிழகத்தில் உள்ள இடஒதுக்கீட்டிற்கு எதிராக முயற்சிகள் செய்யப்பட்டன. அப்பொழுது, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, இதுவரை வகுப்புவாரி உரிமை இடஒதுக்கீடு வெறும் அரசு ஆணையாக இருந்த நிலையை மாற்றி, சட்டமன்றத்தில் ஒரு தனிச் சட்டத்தையே இயற்றி, அதனை (31சி பிரிவின் கீழ்) அரசியல் சட்டத்தின் 9-வது அட்டவணைப் பாதுகாப்பின் கீழ், இந்திய அரசியல் சட்டத்தின் 76-வது அரசியல் சட்டத் திருத்தத்தின் மூலம் (1994) கொண்டு வந்து நிறைவேற்றி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இது அமலில் உள்ளது.

இதனை எதிர்த்து திட்டமிட்டே உச்சநீதிமன்றத்தில் சில அமைப்புகள் வழக்குப் போட்டன. உச்சநீதிமன்றத்தில் ஜஸ்டிஸ் கபாடியா தலைமை நீதிபதியாக இருந்தபோது அந்த அமர்வு இந்த வழக்கினைத் தள்ளுபடி செய்து, 69 சதவிகித ஆணை செல்லும் என்று தீர்ப்பளித்தது. மறு ஆய்வு மனுவை, இதே வழக்குரைஞர் போட்டபோதும் தள்ளுபடி செய்தார். மீண்டும், மீண்டும் ஒவ்வொரு ஆண்டும் இடம் கிடைக்காத சில மாணவிகளை வைத்து வழக்குப் போடுவதும், சில இடங்களைப் பெறுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவிகத இடஒதுக்கீட்டுக்கு எதிராக நாகர்கோவிலை சேர்ந்த மாணவி திருமால் மங்கள் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவர் தனது மனுவில், “69 சதவிகித இடஒதுக்கீடு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது, இட ஒதுக்கீடு முறையால் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மற்ற மாநிலங்களில் உள்ள இடஒதுக்கீட்டை பின்பற்றி இருந்தால் தனக்கு மருத்துவ படிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். எனவே தமிழகத்தில் நிலுவையில் இருக்கும் இடஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளார்.

இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதிபதி இந்த மனு அவசர வழக்காக வரும் திங்கட்கிழமை விசாரிக்கப்படும் என தெரிவித்தார். இடஒதுக்கீடு முறைக்கு எதிராக ஏற்கனவே பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close