[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்

அம்பானி நிறுவனத்தை விற்கிறது ரிசர்வ் வங்கி!

reserve-bank-gets-the-rank-to-sell-reliance-infra

வங்கிகளில் உள்ள வாராக்கடன் அளவு 6 லட்சம் கோடியாக உள்ளது. இந்தத் தொகையை நடப்பு நிதியாண்டு முடிவதற்குள், அதாவது 2018 மார்ச் மாதத்துக்குள் குறைத்துவிட ரிசர்வ் வங்கி தனது நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

வ‌ராக்கடன் வசூல் சட்டத்தின்கீழ், கடனை வசூலிக்க முடியாத நிறுவனங்களின் சொத்துக்களை விற்பனை செய்து கடனை வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கடன் பெற்று செலுத்த முடியாத நிலையில் உள்ள நிறுவனங்களை விற்பனை செய்ய ரிசர்வ் வங்கிக்கு இந்தச் சட்டம் அதிகாரம் அளித்திருக்கிறது. வங்கிகளில் சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் வாராக்கடன் உள்ள நிலையில், சொத்துகள் விற்பனை மூலம் வங்கிகளின் நிதிநிலையை மேம்படுத்த, ரிசர்வ் வங்கி தயாராகி விட்டது. இதனால், சிமென்ட் நிறுவனங்கள், ஸ்டீல் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், நிலக்கரி மற்றும் எண்ணெய் சுரங்கங்கள், ஹோட்டல்கள், தனியார் விமானங்கள் ஆகியவற்றை விற்பனை செய்ய நடவடிக்கை தொடங்கியுள்ளது.

நாட்டின் முன்னணி தொழிலதிபரான அனில் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் மட்டும் ஒரு லட்சத்து 21 ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளது. அதற்கு ஆண்டுக்கு 8 ஆயிரத்து 300 கோடி வட்டி செலுத்த வேண்டிய நிலையில், வட்டி கட்ட இயலாத நிதிநிலைமையில் அந்தக் குழுமத்தின் ரிலையன்ஸ் இன்ஃப்ரா, ரிலையன்ஸ் டிஃபென்ஸ் ஆகியவை உள்ளதாக தெரிகிறது. எனவே, இவை உள்ளிட்ட நலிவடைந்த நிறுவனங்களை விற்கும் அதிகாரம் ரிசர்வ் வங்கிக்கு கிடைத்துள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close