[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க வீரரை இடித்த விவகாரத்தில் விராட் கோலிக்கு ஐசிசி கண்டனம்
  • BREAKING-NEWS சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு
  • BREAKING-NEWS கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிதித்துறை செயலாளர் கூறியதால் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

கண்டம் விட்டு கண்டம் தாக்கும் 'அக்னி-5' சோதனை வெற்றி

agni-5-india-s-longest-range-nuclear-capable-missile-successfully-test-fired

கண்டம் விட்டு கண்டம் தாவி இலக்கைத் தாக்கக்கூடிய அக்னி -5 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக முடிந்தது.

ஒடிசா மாநிலம் பலாசோர் பகுதியில் உள்ள வீலர் தீவில் நடைபெற்ற இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்தது. இந்த ஏவுகணை 5,500 கிலோமீட்டர் முதல் 5,800 கிலோமீட்டருக்கும் அதிகமான தொலைவில் இருக்கும் இலக்கை தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. குறிப்பாக வடக்கு சீனா வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. சீனாவுக்கு எதிரான பாதுகாப்பு நோக்கில் இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 50 ஆயிரம் கிலோ எடை கொண்ட அக்னி-5, 17.5 மீட்டர் நீளமும், 2 மீட்டர் விட்டமும் கொண்டது.

முன்னதாக அக்னி 1 (700 கி.மீ.,), அக்னி 2 (2,000 கி.மீ.,) மற்றும் அக்னி 3 (2,500 கி.மீ.,) ஏவுகணைகள் பாகிஸ்தானுக்கு எதிரான பாதுகாப்பு நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டது, இதற்கு முன் இதே இடத்தில் கடந்த ஆண்டு ஜனவரி‌15ஆம் தேதி ஏவுகணை சோதனை ந‌டத்தப்பட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close