[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

ஹைதராபாத் குண்டுவெடிப்பு வழக்கு... 5 பேருக்கு மரண தண்டனை

yasin-bhatkal-4-others-sentenced-to-death-for-2013-hyderabad-blasts

ஹைதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு வழக்கில் இந்தியன் முஜாஹிதின் அமைப்பைச் சேர்ந்த யாசின் பத்கல் உள்ளிட்ட 5 பேருக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆந்திர மாநிலத் தலைநகரான ஹைதராபாத்தின் தில்சுக்நகர் பகுதியில் கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி நடத்தப்பட்ட இரட்டை வெடிகுண்டு தாக்குதலில் 18 பேர் உயிரிழந்தனர். மேலும், 130-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இந்தியன் முஜாஹிதின் அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான யாசின் பத்கல், அதே ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் நேபாள எல்லை அருகே கைது செய்யப்பட்டார். இதுதொடர்பான வழக்கு ஹைதராபாத்தில் உள்ள தேசிய புலானாய்வு அமைப்பின் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதில், குற்றம்சாட்டப்பட்ட யாசின் பத்கல், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜியா உர் ரஹ்மான், அஸாதுல்லா அக்தர், தஹாசீன் அக்தர், அஜாஸ் ஷேக் ஆகியோர் குற்றவாளிகள் என சிறப்பு நீதிமன்றம் கடந்த 13ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அவர்களுக்கான தண்டனை விபரம் இன்று அறிவிக்கப்பட்டது. யாசின் பத்கல் உள்ளிட்ட 5 பேருக்கும் மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close