[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தண்ணீர் பிரச்னைக்காக மாவட்டந்தோறும் ஜூன் 22 முதல் திமுக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் - திமுக மாவட்டச் செயலாளர்களுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்
  • BREAKING-NEWS வாகன ஓட்டு‌நர் உ‌ரிமம் பெறுவதற்கான குறைந்த‌பட்ச கல்வி தகுதியை அடியோடு நீக்கம் செய்ய மத்திய அரசு முடிவு ‌செய்துள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS ஆந்திர போலீஸாருக்கு இன்று முதல் வார விடுமுறை அறிவித்தார் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
  • BREAKING-NEWS மக்களவை சபாநாயகராக பாஜவை சேர்ந்த ஓம் பிர்லா எம்.பி. போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • BREAKING-NEWS நடிகர் சங்கத் தேர்தலை நிறுத்துமாறு தென்சென்னை மாவட்ட சங்கங்களின் பதிவாளர் உத்தரவு
  • BREAKING-NEWS தேர்தல் தோல்வியை அடுத்து கர்நாடக மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைத்தது காங்கிரஸ் கட்சி

மாநிலங்களவை மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு

rajya-sabha-adjourns-sine-die

ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்த நிலையில் மாநிலங்களவை மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் கடந்த நவம்பர் மாதம் 16-ஆம் தேதி தொடங்கியது. அன்றிலிருந்தே ரூபாய் நோட்டு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்பி வரும் எதிர்க்கட்சிகள் அவையை செயல்பட விடாமல் முடக்கி வந்தன. இந்நிலையில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று மாநிலங்களவை 11 மணிக்கு தொடங்கியது. அவையில் பிரதமர் மோடி பங்கேற்றார். ஆனால் ரூபாய் நோட்டு விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவை மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, எதிர்க்கட்சிகள் ஊழல் மற்றும் தீவிரவாதத்திற்கு ஆதரவாக போராடுவதாக மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு குற்றம்சாட்டினார். மேலும் ஊழல் மற்றும் கறுப்புப் பணத்திற்கு எதிராக ஆளும் அரசு போராடுவதாகவும் விளக்கம் அளித்தார்.

இதேபோல, மக்களவையிலும் ரூபாய் நோட்டு விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மக்களவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் 12 மணிக்கு அவை கூடிய போதும் அமளி தொடர்ந்ததால் மக்களவையும் மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக, நாடாளுமன்றம் இன்று கூடுவதற்காக முன்பாக, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பிரதமர் மோடியை சந்தித்தனர். அப்போது, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் விவசாயிகள் எதிர்கொள்ளும் கஷ்டங்கள் குறித்த மனு பிரதமரிடம் அளிக்கப்பட்டது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close