[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தொடர் மழை எதிரொலி : குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு
  • BREAKING-NEWS இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில் அர்த்தமில்லை- இம்ரான் கான்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

திருப்பதி தேவஸ்தான வாரியத்தில் இருந்து சேகர் ரெட்டி நீக்கம்

shekhar-reddy-s-dismissed-from-the-board-of-tirupathi-devasdhanam

வருமான வரித்துறை சோதனையைத் தொடர்ந்து திருப்பதி தேவஸ்தான வாரியத்தில் இருந்து சேகர் ரெட்டி நீக்கப்பட்டுள்ளார்.

சென்னையில், தொழிலதிபர்கள் சேகர் ரெட்டி, சீனிவாச ரெட்டி ஆகியோரின் வீடுகள் உள்ளிட்ட 3 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். ஏற்கனவே இரண்டு நாட்கள் சோதனை நடைபெற்ற நிலையில், இன்று மூன்றாவது நாளாக சோதனை நடந்தது. அந்தச் சோதனையில் வேலூரில் காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சேகர் ரெட்டிக்குச் சொந்தமான 24 கோடி ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. இதுவரை 131 கோடி ரூபாய் சிக்கியுள்ளது.

இது தொடர்பான விசாரணை அமலாக்கத்துறைக்கு மாற்றப்படுகிறது. இதனைடையே சேகர் ரெட்டி திருப்பதி தேவஸ்தான வாரியத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். வருமான வரித்துறை சோதனையைத் தொடர்ந்து ஆந்திர அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close