[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பதவியை நீட்டிக்கக்கோரி பொன்.மாணிக்கவேல் உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
  • BREAKING-NEWS எங்கள் குடும்பத்தினருக்கான எஸ்பிஜி பாதுகாப்பை நீக்கியதும் அரசியலில் ஒரு அங்கம் தான் - பிரியங்கா காந்தி
  • BREAKING-NEWS மக்கள் அதிமுக பக்கம் இருப்பதால் ரஜினி கூறும் அதிசயம், அற்புதம் எங்களுக்கு சாதகமாகவே அமையும் - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மறைமுகத் தேர்தல் முறை அதிகார துஷ்பிரயோகத்திற்கும், குதிரை பேரத்திற்கும் வழிவகுக்கும் - திருமாவளவன் எம்.பி.
  • BREAKING-NEWS 2021 ஆம் ஆண்டில் அதிமுக அரசு மலரும் என்பதையே அதிசயம் நிகழும் என்று ரஜினி கூறியிருக்கலாம் - முதல்வர் பழனிசாமி

நாடாளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வரும் எதிர்க்கட்சிகள்.. நிலுவையில் உள்ள மசோதாக்கள்

uproar-opposition-bills-pending-in-parliament

ரூபாய் நோட்டுகள் திரும்பப்பெறப்பட்ட விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால், நிலுவையிலுள்ள 20க்கும் மேற்பட்ட மசோதாக்களை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு 20க்கும் மேற்பட்ட மசோதாக்களை நிறைவேற்ற முடிவு செய்திருந்தது. அவற்றில் முக்கியமானது ஜிஎஸ்டி குறித்த மசோதாக்கள். அதாவது மத்திய சரக்கு மற்றும் சேவை வரி மசோதா 2016 ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி மசோதா 2016, சரக்கு மற்றும் சேவை வரி - வருவாய் இழப்புக்கு ஈடுசெய்தல் மசோதா 2016, வாடகைத்தாய் விதிமுறைகள் மசோதா 2016 போன்றவற்றை அறிமுகம் செய்தல், பரிசீலித்தல் மற்றும் நிறைவேற்றுதலுக்கு திட்டமிடப்பட்டுள்ளது.

மனநலம் குறித்த மசோதா, மகப்பேறு பலன் மசோதாவில் திருத்தம், விவாகரத்து சட்டத்தில் திருத்தம் கொண்டுவரும் மசோதா, நுகர்வோர் பாதுகாப்பு மசோதா 2015 மற்றும் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா போன்றவையும் மக்களவையில் நிலுவையில் உள்ளன. எச்ஐவி மற்றும் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல் மசோதா 2014, பணியாளர் இழப்பீடு திருத்த மசோதா 2016 ஊழலை அம்பலப்படுத்துவோர் பாதுகாப்பு திருத்த மசோதா 2015 ஊழல் தடுப்பு சட்டத்திருத்த மசோதா 2013 போன்றவை மாநிலங்களவையில் நிலுவையில் உள்ளன. இவை தவிர 4 நிதி மசோதாக்களும் நடப்புக் கூட்டத்தொடரில் நிலுவையில் உள்ளன

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close