[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை -இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 அதிகரித்து ரூ.28,824க்கு விற்பனை
  • BREAKING-NEWS நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்.21இல் இடைத்தேர்தல்
  • BREAKING-NEWS அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் மழை நீடிக்க வாய்ப்பு. 14 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் - ‌வானிலை மையம்

ரயில் டிக்கெட் முன்பதிவில் திருநங்கைகளுக்கு தனி இடம்

railways-introduces-third-gender-column-in-its-reservation-forms

ரயில்வே டிக்கெட் முன்பதிவுக்கான விண்ணப்பப் படிவத்தில் திருநங்கைகளுக்கு எனத் தனி இடம் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், டிக்கெட் முன்பதிவு மற்றும் ரத்துக்கான படிவத்தில் ஆண், பெண் வரிசையில் திருநங்கையர் மூன்றாம் பாலினமாக சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி (IRCTC) இணையதள முன்பதிவு படிவத்திலும்,‌ ரயில்வே நிலையத்தில் வாங்கப்படும் படிவங்களிலும் இந்த புதிய மாற்றம் நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் தொடர்ந்த வழக்கில், ரயில்வே அமைச்சகத்தை தொடர்பு கொள்ளுமாறு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதையடுத்து ரயில்வேத்துறை இந்த மாற்றத்தை நடைமுறைப்படுத்தி உள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close