[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்
  • BREAKING-NEWS என்னைக் கைது செய்தால் கவலைப்படமாட்டேன்; ஆனால் ராஜிவ்காந்தியை ஆதரித்தவர்களை நான் கைது செய்வேன் - சீமான்
  • BREAKING-NEWS கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.20 கோடி பறிமுதல் - வருமானவரித்துறை
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கொள்ளை வழக்கு: கொள்ளையன் முருகனை 8 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க பெங்களூரு குற்றவியல் நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS கோவை பாரதியார் பல்கலைக்கழக துணை வேந்தராக பி.காளிராஜை நியமித்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இனி வியாழக்கிழமை தோறும் டெங்கு ஒழிப்பு தினம் - சுகாதாரத்துறை
  • BREAKING-NEWS உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் அயோத்தி வழக்கின் விசாரணை இன்றுடன் நிறைவு

ரூபாய் நோட்டு விவகாரம்.. மகா ஜனங்களே..நீங்க என்ன நினைக்கிறீங்க?..கருத்து கேட்கும் மோடி

currency-note-issue-modi-10-question-to-public

500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு குறித்து மக்களின் ‌நேரடி கருத்தை பிரதமர் கோரியுள்ளார்.

ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது தொடர்பாக 10 கேள்விகள் கொண்ட கருத்துக்கணிப்‌பு மூலம் மக்கள் அரசிடம் கருத்து தெரிவிக்கலாம் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். நரேந்திர மோடி ஆப் என்ற செல்ஃபோன் ஆப் மூலம் மக்கள் கருத்துக்களை தெரிவிக்கும்படி பிரதமர் தனது டிவிட்டர் பக்கத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த கருத்துக்கணிப்பில் இடம்பெற்றுள்ள கேள்விகளை இப்போது பார்க்கலாம்.

ஆம், இல்லை எனத் தேர்வு செய்யக்கூடிய கேள்விகள்

1) இந்தியாவில் கறுப்புப் பணம் இருக்கிறது என நினைக்கிறீர்களா? என முதல் கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

2) ஊழல் மற்றும் கறுப்பு பணம் என்ற தீமைகள் போராடி நீக்கப்படவேண்டியவை என நினைக்கிறீர்களா?

‌3) கறுப்‌பு பணத்தை சமாளிக்க அரசு இதுவரை எடுத்துள்ள ஒட்டுமொத்த நடவடிக்கைகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

4) ஊழக்கு எதிராக இந்த அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்விக்கு பிரமாதம், மிக சிறப்பு, சிறப்பு, சுமார் மற்றும் பயனில்லை என்ற கருத்துகளில் ஒன்றை தேர்வு செய்யலாம்.

5) ‌500 ரூபாய் மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகளை தடை செய்த இந்த அரசின் நடவடிக்கை குறித்து என்ன நினைக்கிறீர்கள் என 5வது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு சரியான திசையிலான சிறந்த நடவடிக்கை, நல்ல நடவடிக்கை, எந்த வித்தியாசத்தையும் கொண்டு வரப்போவதில்லை என்ற மூன்று தேர்வுகளில் ஏதாவது ஒன்றை பதிலாக தேர்வு செய்யலாம்.

6) 500, 1000 ரூபாய்‌ நோட்டுகள் செல்லாது என அறிவித்தது கறுப்பு பணம், ஊழல், மற்றும் பயங்கரவாதத்தை தடுக்க உதவும் என கருத்துகிறீர்களா என்ற கேள்விக்கு உடனடி தாக்கம் இருக்கும், மத்திய மற்றும் நீண்ட கால அடிப்படையில் தாக்கம் இருக்கும், குறைந்த அளவே தாக்கம் மற்றும் தெரியாது என்ற நான்கில் ஒன்றை பதிலாக தரலாம்.

7) ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு ரியல் எஸ்டேட், உயர்கல்வி, மருத்துவம் ஆகியவை சாதாரண மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யும் என்ற கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்வதாகவோ, ஓரளவு ஏற்றுக் கொள்வதாகவோ, சொல்ல முடியாது என்றோ மக்கள் பதிவிடலாம். அதே நேரத்தில் இதை ஏற்றுக் கொள்ள முடியாது என பதிவிட செயலியில் வாய்ப்பு தரப்படவில்லை.

8) ஊழல், கறுப்புப் பணம், பயங்கரவாதம், மற்றும் கள்ளநோட்டுகளுக்கு எதிரான இந்த போராட்டத்தால் ஏற்பட்ட அசவுகரியத்தை நீங்கள் பொருட்படுத்தினீர்களா என்று எட்டாவது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு இல்லை, ஓரளவு, ஆனால் அது ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான் மற்றும் ஆம் என்ற மூன்றில் ஒன்றை பதிலாக அளிக்கலாம்.

9) ஊழலுக்கு எதிராக போராடுவதாக கூறும் சிலர் தற்போது உண்மையில் கறு‌ப்புப் பணம், ஊழல் மற்றும் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக போராடிக் கொண்டிருக்கிறார்கள் என நம்புகிறீர்களா என்றும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு ஆம் அல்லது இல்லை என மக்கள் பதிலளிக்கலாம்.

10) பிரதமருடன் பகிர்ந்துகொள்ள ஏதாவது யோசனைகள், கருத்துகள் இருக்கிறதா என பத்தாவது கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம். இந்த கேள்விகள் ஆங்கிலத்திலும் , ஹிந்தியிலும் மட்டுமே இடம்பெற்றுள்ளன. சாதாரண மக்களும் பிரதமருக்கு பதிலளிக்கும் வகையில் மாநில மொழிகளில் இடம்பெறவில்லை.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close