[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இ-சிகரெட் விற்பனை, உற்பத்தி, ஏற்றுமதி இறக்குமதிக்கு தடை - மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னை உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இடிமின்னலுடன் கனமழை. வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக மழை நீடிக்கும் எனத் தகவல்

ரயில்வேயின் ஒரு ரூபாய் காப்பீடு.. 2 கோடிக்கும் அதிகமான பயணிகள் தேர்வு

over-2-crore-passengers-opt-for-rail-insurance-cover

ரயில்வேத்துறை அறிமுகப்படுத்திய ஒரு ரூபாய்க்கும் குறைவான பிரீமியம் தொகையிலான பயணக் காப்பீடு திட்டத்தினை 2 கோடிக்கும் அதிகமான பயணிகள் தேர்வு செய்துள்ளனர்.

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு 92 பைசா என்ற கட்டணத்தில் ரூ.10 லட்சம் வரையிலான பயணக்காப்பீடை ரயில்வேத் துறை கடந்த செப்டம்பரில் அறிமுகப்படுத்தியது. இந்த காப்பீடை விருப்பமுள்ள பயணிகள் தேர்வு செய்து கொள்ளலாம் என்றும் ரயில்வேத்துறை அறிவித்திருந்தது. இந்த அறிவிப்புக்கு ரயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

கடந்த அக்டோபர் 30ம் தேதி வரையிலான காலஅளவில் இந்த பயணக்காப்பீடு திட்டத்தினை 20,763,353 பயணிகள் தேர்வு செய்துள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. தீபாவளி சலுகையாக 92 பைசா என்ற கட்டணத்தை ஒரு பைசா என்ற அளவில் ரயில்வே துறை குறைத்தது. அக்டோபர் 7 முதல் தீபாவளி வரை அமலில் இருந்த இந்த சலுகை, அக்டோபர் 31-ம் தேதிக்குப் பின்னர் 92 பைசா என்ற பழைய கட்டணமாகவே மாற்றப்பட்டது.

அதேநேரம், ஆன்லைன் மூலம் தினசரி 5.5 லட்சம் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்துவரும் நிலையில், அவர்களில் 3.5 லட்சம் பேர் மட்டுமே பயணகாப்பீடைத் தேர்வு செய்கின்றனர்.

காப்பீடின் பயன் என்ன?:

ரயில்வே துறை வழங்கும் இந்த காப்பீடைத் தேர்வு செய்தவர்களுக்கு மரணம் அல்லது உடல் உறுப்புகள் முழுவதுமாக செயலிழந்தால், அவரது குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வரை இழப்பீடாக வழங்கப்படும். மேலும், உடல் உறுப்புகள் பாதியளவு நிரந்தரமாக செயலிழந்தால் அவர்களுக்கு ரூ.7.5 லட்சம் இழப்பீடாகவும் வழங்கும்.

ரயில் விபத்து, பயங்கரவாதிகள் தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களால் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடும், பயணச்செலவுகளுக்காக ரூ.10,000-யும் அளிக்கப்படும். இந்த வசதி புறநகர் மின்சார ரயில்களைத் தவிர மற்ற ரயில்களில் பயணம் மேற்கொள்ளும் அனைத்து பயணிகளும் இந்த வசதியைப் பெற்றுக் கொள்ளலாம்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close