[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாதிகள் நடமாட்டம்: ராணுவத்தினருக்கு உளவுத்துறை எச்சரிக்கை

terrorist-activity-in-kashmir-valley-intelligence-warning

இந்திய ராணுவத்தின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க, காஷ்மீரில் 250 பயங்கரவாதிகள் தயாராக உள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.

இந்த பயங்கரவாதிகளில் பெரும்பாலானோர் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது, ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்தவர்கள் என்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் பதுங்கியிருப்பதாகவும் உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்திய ராணுவத்தை குறிவைத்தும் பிற இடங்களிலும் அவர்கள் தாக்குதல் நடத்தலாம் என்பதால் எல்லைப்பகுதி உட்பட நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

வட மாநிலங்களில் தசரா கொண்டாடப்பட்டு வருவதால் முக்கிய இடங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. யூரி ராணுவ முகாமில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 19 வீரர்கள் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் 40 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்களின் 7 முகாம்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டன.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close