[X] Close
JUST IN
  • BREAKING-NEWS விருதுநகர் அருகே பஞ்சாயத்து தலைவர் பதவி ஏலம் விடப்படுவதை தடுத்த இளைஞர் அடித்துக்கொலை: 7 பேர் கைது
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வடகிழக்கு மாநி‌லங்களில் நீடிக்கிறது வன்முறை
  • BREAKING-NEWS சிறார்களின் ஆபாச வீடியோக்களை முகநூலில் பதிவேற்றம் செய்த ஏசி மெக்கானிக் திருச்சியில் கைது
  • BREAKING-NEWS தெலங்கானா என்கவுன்ட்டர் விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

’செல்ஃபி வித் காதி’: கதராடைகளை இளைய தலைமுறையிடம் சேர்க்க புதிய திட்டம்

khadi-takes-selfie-route-to-genx-s-heart

கதராடைகள் குறித்து இளையதலைமுறையினரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த செல்பி வித் காதி எனும் புதிய திட்டத்தை உத்தரப்பிரதேச மாநில காதி வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது.

கதர் பற்றிய விழிப்புணர்வு பொதுமக்களிடையே வரவேண்டும் என்ற நோக்கத்தில் உ.பி. கதர் மற்றும் கிராமோதய நிறுவனம் செல்பி போட்டியை அறிவித்துள்ளது. இப்போட்டியில் கதர் உடை அணிந்து செல்பி எடுத்து அந்த புகைப்படத்தை ‘செல்பி வித் காதி’ என்ற பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவித்திருந்தது. 200 செல்பி புகைப்படங்கள் வந்திருந்த நிலையில் சிறந்த 5 புகைப்படத்திற்கு இன்று விருந்து வழங்கப்பட்டது. இந்த போட்டியில் இளைஞர் முதல் முதியோர் வரை பலரும் பங்கேற்றனர். இதுகுறித்து உ.பி கதர் மற்றும் கிராமோதய தலைமை நிர்வாக அதிகாரி அகிலேஷ் மிஸ்ரா கூறுகையில், ‘செல்பிக்காகப் பல இடங்களுக்குப் பயணிக்கும் மக்கள், அதனை இணையத்தில் பதிவேற்றுவதில் அதிக ஆர்வம் காட்டிவருகின்றனர். கதர் ஆடை அணிவதை ஊக்குவிக்கும் வகையில் இப்போட்டி நடத்தப்பட்டது’ என தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close