[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்திய ஜே.என்.யூ. மாணவர்கள் மீது தடியடி
  • BREAKING-NEWS தமிழக ஆளுநரின் செயலாளராக இருந்த ஆர்.ராஜகோபால் தலைமை தகவல் ஆணையராக நியமனம்
  • BREAKING-NEWS சியாச்சினில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் பலி

வெள்ளத்தில் மிதக்கும் ஹைதராபாத்: உதவிக்கரம் நீட்டும் தன்னார்வத் தொண்டர்கள்

spirit-of-hyderabad-in-full-display-as-citizens-come-together-to-help-the-flood-affected

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கனமழையால் நகரின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களுக்கு உணவு, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அரசு அதிகாரிகளும், தன்னார்வ தொண்டர்களும் வழங்கி வருகின்றனர். இதேபோல தெலங்கானாவின் பிறபகுதிகளிலும், ஆந்திர மாநிலத்தின் பல பகுதிகளிலும் பெய்துவரும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் ஜெயின் இளைஞர் மண்டல உறுப்பினரான ஆஷிஷ் ஜெயின் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கியுள்ளார்.
இதுகுறித்து ஆஷிஷ் கூறுகையில், ‘கடந்த சில தினங்களுக்கு முன் எனது தொலைபேசி எண்ணை ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தேன். அதன்பின் பல தன்னார்வ தொண்டர்கள் வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு உதவ தாமாக முன்வந்தனர். அவர்களுடன் இணைந்து ஹைதராபாத்தில் நிஜாம்பேட்டை, பேகம்பேட், மல்கஜ்கிரி, குகத்பல்லி, அமாம் காலனி உள்ளிட்ட பல பகுதிகளில் கடந்த 2 நாட்களில் 9 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் விநியோகம் செய்யப்பட்டது. அதனுடன் பால் பாக்கெட்டுகள், பிரியாணி, பிஸ்கட் மற்றும் குடிநீர் போன்றவையும் வழங்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close