[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது தேர்தல் ஆணையத்தின் செலவை குறைக்கும், நேரத்தையும் குறைக்கும்- திருமாவளவன்
  • BREAKING-NEWS ஒரே சமயத்தில் மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்துவது குறித்து மீண்டும் ஆலோசனை நடத்த மோடி அரசு முடிவு
  • BREAKING-NEWS மீன்பிடி தடைக்கால நிவாரண தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ.5000 வழங்கப்படும்- தமிழக அரசு
  • BREAKING-NEWS நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக மக்களின் உணர்வுகளை முதல்வர் பழனிசாமி எதிரொலிக்கவில்லை- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 20ம் தேதி வெளியிடப்படும்- அமைச்சர் கே.பி.அன்பழகன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 72.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 67.52 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கோதாவரி - காவிரி நதிநீர் இணைப்பை முதன்மையாக நிறைவேற்ற பிரதமர் மற்றும் நீர்வள அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன் - முதல்வர் பழனிசாமி

மதங்களைத் தாண்டி கலையை உணர வைக்கும் முஸ்லிம் பெண்ணின் 'பேசும் ஓவியம்’

kerala-muslim-artist-exhibiting-krishna-paintings-at-bjp-meet

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நடைபெற்ற பாஜக தேசிய கவுன்சில் கூட்டத்தில் முஸ்லீம் பெண் ஒருவர் இந்து கடவுளான கிருஷ்ணரின் ஓவியங்களை வரைந்து கண்காட்சியில் வைத்திருந்தது பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

கேரள மாநிலம் கோழிக்கோட்டினைச் சேர்ந்த முஸ்லீம் பெண் ஜாஸ்னா. 24 வயதான இவர் கடந்த ஒன்றரை வருடமாக கண்ணாடி ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் காட்டி வருகிறார். கேரளாவில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் இவர் கண்காட்சிக்காக வைத்த கண்ணாடி ஓவிய படங்கள் அனைத்தும் இந்து கடவுளான கிருஷ்ணரின் உருவப்படங்கள். முஸ்லீம் பெண் ஒருவர் இந்து கடவுளின் ஓவியங்களை வரைந்தது பார்வையாளர்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

இது குறித்து அவர் கூறுகையில்,

என்னை பொறுத்தவரை இவை வெறும் ஓவியங்கள். இவற்றை மதத்தோடு ஒப்பிட வேண்டாம். முஸ்லீம் பெண் ஒருவர் இந்து கடவுளின் உருவ படத்தை வரைகிறார் என வேறுபாடுகளுடன் பார்க்க வேண்டாம். நான் சிறு வயதில் இருக்கும் போதே என் அம்மா என்னை கண்ணா என செல்லமாக அழைப்பார். ஆதலால் கண்ணனின் ஓவியம் என்னை ஈர்த்தது.எனக்கு இந்த ஓவியம் அசாதாரணமானதாகத் தெரியவில்லை.எனத் தெரிவித்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close