[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் 405 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன - தமிழக அரசு
  • BREAKING-NEWS கஜா புயலை எதிர்கொள்ள அவசர கால சேவை 108, மருந்து உதவி சேவை 104 தயார் நிலையில் உள்ளது - தமிழக அரசு
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்

கேரளா, தமிழகத்தில் களைகட்டிய ஓணம் பண்டிகை...

kerala-festival-celebrate-to-tamilnadu

ஓணம் இந்தியாவின் கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஆகும். இது கேரள மக்கள் வாழும் தமிழ் நாட்டிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

ஓணம் கொண்டாடுவது எதற்க்கென்றால், மகாபலி என்ற மன்னர் கேரளத்தை சீரோடும், சிறப்போடும் ஆண்டு வந்தார். தானதருமத்திற்கு பெயர்போன அவர் காலத்தில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தனர்.

இதைப் பார்த்த தேவர்கள் பொறாமையால் விஷ்ணுவிடம் வேண்டினர். அவரும் வாமனன் எனும் குள்ள பார்ப்பனனாக அவதாரமெடுத்து மகாபலியை அழித்தார்.

ஆனால் பாதாளம் செல்லும் முன்பு, தான் நாட்டுமக்கள் மீது மிகுந்த அன்பு வைத்திருப்பதால் வருடம் ஒருமுறை பாதளத்தில் இருந்து தனது நாட்டுக்கு வந்து மக்களைக் கண்டு மகிழும் வரம் வேண்டினான் மகாபலி.

அவ்வாறு ஆண்டுக்கு ஒரு முறை மாமன்னன் தன் மக்களைப் பார்க்க வரும் நாளே ஓணம். அதன்படி, ஒவ்வொரு திருவோணம் அன்று மகாபலி பாதாள உலகில் இருந்து பூலோகதிற்கு வருவதோடு, தங்களது வீடுகளுக்கும் வந்து செல்வதாக கேரள மக்கள் நம்புகிறார்கள்.

ஓணம் நாளில் மக்கள் வாசலில் அத்தப்பூக் கோலம் போட்டு மகாபலியை வரவேற்கிறார்கள். மேலும் புது அரிசி மாவில் உணவுகள் தயார் செய்யப்பட்டு கடவுளுக்கு படைக்கின்றனர்.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கேரளாவின் பாரம்பரிய விளையாட்டுகளான கயிறு இழுத்தல், களறி, படகுப்போட்டிகள், பாரம்பரிய நடனப் போட்டிகள் நடைபெறும்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close