[X] Close
JUST IN
இந்தியா 08 Sep, 2016 05:56 PM

ரூ.1.72 கோடி பில் கொடுத்த ஓலா நிறுவனத்தால் அதிர்ச்சியடைந்த வாடிக்கையாளர் !!!!

ola-gave-crore-bill-to-customer

அண்மையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த ரதீஷ் சேகர் என்பவர், ஓலா டாக்சியில் பயணம் செய்த போது ரூ.9.15 லட்சத்துக்கு ஓலா பில் வந்தது நாம் அறிந்ததே.! ஒவ்வொரு நாளும் பல ஆயிரக்கணக்கான பயணிகள் பயணம் செய்யும் ஓலாவின் கணினி செயல்பாட்டில் தொடர்ந்து பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

அண்மையில், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ’மை ஆப்பரேட்டர்’ நிறுவனந்த்தின் தலைமை நிர்வாக அதிகாரியான அங்கித் ஜெயின் அவரது மனைவியுடன் அல்வார் மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புவாய்ந்த புகழ்பெற்ற நீம்ரானா கோட்டையைக் காணச் சென்றார். கோட்டையை சுற்றிபார்த்துவிட்டு ஓலா டேக்ஸியில் ராஜஸ்தான் திரும்பினர். அப்போது ஓலா டாக்சியின் டிரைவர் அவருக்கு அளித்த பில்லை பார்த்ததும் அதிர்ச்சியடைந்தார். அவருடைய மொத்த பில் ரூ.1,720,0000 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைக் கண்ட ஓட்டுனரும் அதிர்ச்சியடைந்தார். பின் ஓலா நிறுவனத்தை தொடர்பு கொண்டுகேட்டபோது, அவருக்கு ரூ. 6000 பில் வழங்கப்பட்டது. இவ்வாறான குளறுபடிகளை ஓலா நிறுவனம் தவிர்க்க வேண்டும் என்பதுவே பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.

Advertisement:
Advertisement:
[X] Close