[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS தெலங்கானா பெண் மருத்துவர் கொலை : 4 பேர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை
  • BREAKING-NEWS மறு உத்தரவு வரும் வரை உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனுக்களை பெற வேண்டாம்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வெளியான செய்திகளில் உண்மையில்லை: தமிழக அரசு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்

தக்காளி விலை கடுமையாக வீழ்ச்சி

tomato-prices-decline

சென்னையில் ‌தக்காளி விலை கடுமையாக சரிந்துள்ளது. சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த ஜூன் மாதத்தில் ஒரு கிலோ தக்காளி மொத்தவிலையில் 80 ரூபாயாகவும், சில்லறை விலையில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபா‌ய் வரையும் கடுமையாக உய‌ர்ந்தது.

இதன்பின்பு, தக்காளி விலை படிப்படியாக குறைந்து வந்தது. கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி 30 ரூபாயாக இருந்தது. இந்நிலையில் தக்காளி விலை தற்போது கடுமையாக சரிந்துள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ தக்காளி மொத்தவிலையில் 5 ரூபாய்க்கும், சில்லரை விலையில் 7 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து சென்னைக்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதே விலை சரிவுக்கு காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close