[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நிலவின் சுற்றுவட்டப்பாதையை நெருங்குகிறது சந்திரயான் விண்கலம். காலை ஒன்பதரை மணியளவில் நிலவை சுற்றத் தொடங்கும் என இஸ்ரோ தகவல்
  • BREAKING-NEWS முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் 23ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை சம்மன். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன் ஜாமீன் கோரிய மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • BREAKING-NEWS ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக 22ஆம் தேதி டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம். அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் பங்கேற்பார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
  • BREAKING-NEWS 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்

2017 மார்ச் வரை 'ஜியோ 4ஜி' இலவச சேவை

jio-will-be-free-till-march-31

ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள், எதிர்வரும் மார்ச் 31ம் தேதி வரை இலவச சேவையைப் பெறலாம் என அந்நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சிம்மை அறிமுகம் செய்தார். அறிமுகமாகிய மூன்று மாதம் முடிவடையாத நிலையில் 5 கோடி வாடிக்கையாளர்களைக் கடந்து புதிய சாதனையை படைத்துள்ளது ஜியோ சேவை. தொலைத் தொடர்பு நிறுவன வரலாற்றில் பெரும் மைல்கல்லாக பார்க்கப்படும் இந்த சாதனைக்கு, முக்கிய காரணம் இலவச அழைப்புகள் மற்றும் 4ஜி சேவையும் தான். வரும் 5 ஆம் தேதி முதல் இந்த சேவை முடியும் நிலையில் அடுத்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை இலவச சேவை தொடரும் என முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, கடந்த மூன்று மாதங்களில் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் ஆகியவற்றை விட ரிலையன்ஸ் ஜியோ‌ அதிக வளர்ச்சி கண்டிருப்பதாகக் கூறினார். ‌உலகின் மிக வேகமாக வளரும் தொழில்நுட்ப நிறுவனமாக ஜியோ இருப்பதாகக் கூறிய முகேஷ் அம்பானி, ஜியோ நிறுவனத்தின் வருகையால் தொலைபேசி மற்றும் இணைய தள கட்டணம் குறைந்திருப்பதாகவும் தெரிவித்தார். சராசரி அகன்ற அலைவரிசை இணையதள சேவைப் பயன்பாட்டைப் போல ஜியோவை 25 மடங்கு அதிகமாக வாடிக்கையாளர்கள் பயன்படுத்தியிருப்பதாகவும் முகேஷ் அம்பானி குறிப்பிட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close