[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS கர்நாடக சபாநாயகருக்கு உத்தரவிட முடியாது - உச்சநீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுடன் கிரிக்கெட் விளையாடிய எடியூரப்பா - வைரலாகும் புகைப்படம்

சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை இல்லை.. ரிசர்வ் வங்கி அறிவிப்பு

banks-will-become-operational-in-saturday-and-sunday

பொதுமக்கள் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளும் வகையில் வங்கிகள் வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கம்போல செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் இன்று முதல் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். மேலும், புதிய 500 மற்றும் 2,000 ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தபட உள்ளதாகவும் பிரதமர் அறிவித்திருந்தார். இதையடுத்து பழைய ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மற்றும் அஞ்சலகங்கள் மூலமாக டிசம்பர் 30 வரை மாற்றிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. புதிய ரூபாய் நோட்டுகளை வங்கிகளுக்குக் கொண்டு செல்லும் நோக்கில் இன்று (நவம்பர் 9) வங்கிகள் செயல்படாது என்றும், நவம்பர் 9 மற்றும் நவம்பர் 10 ஆகிய தேதிகளில் ஏடிஎம் மையங்கள் செயல்படாது என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்தசூழலில், பொதுமக்கள் பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற வசதியாக வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் வழக்கம்போல செயல்படும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இரண்டாவது சனிக்கிழமையானாலும் பொதுமக்கள் வசதிக்காக வங்கிகள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close