[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடகா: இன்று மாலை 6 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிய வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் பரவலாக 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சூரியனை ஆய்வு செய்ய அடுத்த ஆண்டு ஆதித்யா விண்கலம் அனுப்பப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS கர்நாடகாவில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் மேட்டூர் அணையை வந்தடைந்தது

தோல்வி அதிர்ச்சியில் இறந்துபோன காங்கிரஸ் மூத்த தலைவர்

mp-congress-leader-ratan-singh-dies-of-heart-attack-at-counting-centre

மத்தியப் பிரதேசத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது சேஹூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரதன் சிங் மாரடைப்பால் வாக்கு எண்ணும் மையத்தில் உயிரிழந்தார். 

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பாஜக கூட்டணி 300க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலையில் உள்ளது. அத்துடன் வட இந்திய பகுதிகளில் அதிக இடங்களில் பாஜக கூட்டனி முன்னிலையில் உள்ளது. அதேபோல மத்தியப் பிரதேசத்திலும் பாஜக முன்னிலையில் இருந்து வருகிறது. 

இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் காங்கிரஸ் கட்சியின் ரதன் சிங் கள நிலவரத்தை சேகரித்து கொண்டிருந்தார். அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார். அந்தச் சமயத்தில் காங்கிரஸ் கட்சி பின்னடைவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close