[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கனமழை காரணமாக தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு
  • BREAKING-NEWS கோயம்புத்தூர் - பொள்ளாச்சி உள்ளிட்ட 3 புதிய ரயில் சேவைகள் இன்று அறிமுகம்
  • BREAKING-NEWS இன்று முதல் 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு

"விரைவில் பிரசாரம் செய்ய இருக்கிறேன்" விஜயகாந்த்

i-will-do-election-campaign-soon-says-vijaykanth

கூடிய விரைவில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

உடல்நிலை குறைவு காரணமாக அமெரிக்காவில் தங்கி சிகிச்சைப் பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிப்ரவரி மாதம் இந்தியா திரும்பினார். அதன் பின் வீட்டில் ஓய்வில் இருந்த அவரை பல அரசியல் தலைவர்களும், சினிமா பிரபலங்களும் சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர் அதிமுக உடனான தேர்தல் கூட்டணி தொகுதி பங்கீட்டில் மட்டுமே பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் தன்னால் பேச முடியாது என செய்கையில் தெரிவித்தார். 

தற்போது தேர்தல் நெருங்கி பரப்புரை சூடுபிடித்துள்ள நிலையில் பிரேமலதா விஜயகாந்த், விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் ஆகியோர் தேமுதிக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் செல்லும் இடமெல்லாம் விஜயகாந்தின் வருகையை தொண்டர்கள் எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. அவர் விரைவில் குணமாகி பரப்புரை செய்ய வேண்டுமென்றும் தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இந்நிலையில் கூடிய விரைவில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக ஓய்விலுள்ள விஜயகாந்த், முகநூலில் வெளியிட்டுள்ள வீடியோவில் இதை தெரிவித்துள்ளார். மருத்துவர்கள் அனுமதி அளிப்பதை பொருத்து தொடர் பரப்புரையில் ஈடுபடபோவதாகவும் அவர் கூறியுள்ளார். அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close