[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது
  • BREAKING-NEWS அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி கிராமத்தில் இருதரப்பினர் இடையே மோதல்; வீடுகள் வாகனங்கள் நொறுக்கப்பட்ட நிலையில் காவல்துறையினர் குவிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் மதுரை மக்களவை தொகுதியை தவிர்த்து மற்ற அனைத்து தொகுதிகளிலும் மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்தது
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் பழுதான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மாற்ற வேண்டும்; வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதால் வாக்குப்பதிவு நேரத்தை நீட்டிக்கவும் கோரிக்கை - தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் வலியுறுத்தல்
  • BREAKING-NEWS பெரம்பலூர் தொகுதியில் உள்ள வெங்கலம் அரசு தொடக்க பள்ளி வாக்குச் சாவடியில் அதிமுகவினர் குடிபோதையில் ரகளை என புகார்
  • BREAKING-NEWS தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி வெறும் 4.86% வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன

ஒரே வீட்டில் இருக்கும் 40 ஓட்டுகள் - வாக்குகளை அள்ள போட்டி போடும் வேட்பாளர்கள்!

40-votes-in-an-one-family-at-near-hosur

ஓசூர் அருகே ஒரே குடும்பத்தில் உள்ள 40 வாக்காளர்களின் வாக்குகளை மொத்தமாக அள்ளுவதற்கு வேட்பாளர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே எட்டப்பள்ளி என்ற ஊரில் 4 தலைமுறைகளாக கூட்டுக்குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர் குண்டேகவுடு குடும்பத்தினர். சிறியவர்கள், பெரியவர்கள் என 60 பேர் உள்ள இந்த குடும்பமே ஊரிலேயே மிகப் பெரியது. 60 பேர் கொண்ட இந்த கூட்டுக்குடும்பம் தற்போது அனைவரது கவனத்தையும், மரியாதையும் பெற்றுள்ளது. 

மனிதர்களாலும், அன்பாலும் நிறைந்திருக்கும் இந்த வீட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கையும் அதிகம். ஊரில்‌ 200க்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ள நிலையில், அதில் 40 பேர் குண்டேகவுடு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தான் ஆச்சரியம். இந்த வீட்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் ஆளுங்கட்சி, எதிர்கட்சி, சுயேச்சை என எந்ததொரு வேறுபாடுமின்றி மொத்த வாக்குகளையும் அப்படியே அள்ள துடிக்கின்றனர் வேட்பாளர்கள்.

Image result for குண்டேகவுடு குடும்பம்

குடும்ப உறுப்பினர்கள் படிப்பு, வேலை நிமித்தமாக வெளிநாடுகள்‌, வெளிமாநிலங்களில் வசித்து வருகின்றனர். ஆனால் கட்டாயம் வாக்க‌ளிக்க வேண்டும் என்பதற்காக தேர்தலின் போது அனைவரும் சொந்த ஊருக்கு வருகை தருகின்றனர். எங்கு இருந்தாலும் தேர்தலின் போது சொந்த ஊருக்கு வந்துவிடுவதை குண்டேகவுடு குடும்பத்தினர் வழக்கமாக கொண்டுள்ளனர்.

தகவல்கள் : ஜெகன்நாத்-செய்தியா‌ளர், ஓசூர்

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close