[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இலங்கையில் 8வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் 81.52% வாக்குகள் பதிவாகியுள்ளன
  • BREAKING-NEWS ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் பொறுப்பில் இருந்து அனில் அம்பானி ராஜினாமா செய்தார்
  • BREAKING-NEWS கேரளா: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடை திறப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு: 4 மணி நேரத்தில் 50 சதவிகிதத்திற்கும் மேல் வாக்குகள் பதிவானதாக தகவல்
  • BREAKING-NEWS கோவாவில் மிக் ரக பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கியது: விமானிகள் இருவரும் பாதுகாப்பாக தப்பினர்
  • BREAKING-NEWS கனமழை காரணமாக நெல்லை நடுவக்குறிச்சி குளக்கரையில் பல இடங்களில் உடைப்பு

கோவையில் இந்திய விமானப்படையில் சேர்வதற்கான ஆள் சேர்ப்பு முகாம்! 

iaf-recruitment-rally-at-coimbatore

இந்திய விமானப்படையில் ஏர்மேன் பிரிவின் கீழ் குரூப் -‘X’ (Education Instructor) ட்ரேடு என்ற பணிக்கான ஆள் சேர்ப்பு முகாம் (Rally) கோவையில் நடைபெற உள்ளது. இதில் தமிழகம், கேரளா, யூனியன் பிரதேசங்களான புதுச்சேரி, அந்தமான் & நிகோபார் மற்றும் லட்சத் தீவுகளை சேர்ந்த ஆண்கள் மட்டும் பங்கேற்கலாம்.

பணிகள்:

ஏர்மேன் பிரிவின் கீழ் குரூப் -‘X’ (Education Instructor) ட்ரேடு

முக்கிய தேதிகள்:

i) தமிழகம், புதுச்சேரி, அந்தமான் & நிகோபார் தீவுகளை சேர்ந்தவர்களுக்கான முகாம் தொடங்கும் நாள்: 17.10.2019, காலை 06.00 மணி  
தமிழகம், புதுச்சேரி, அந்தமான் & நிகோபார் தீவுகளை சேர்ந்தவர்களுக்கான முகாம் நிறைவடையும் கடைசி நாள்: 20.10.2019

ii) கேரளா, லட்சத் தீவுகளை சேர்ந்தவர்களுக்கான முகாம் தொடங்கும் நாள்: 21.10.2019
கேரளா, லட்சத் தீவுகளை சேர்ந்தவர்களுக்கான முகாம் நிறைவடையும் கடைசி நாள்: 23.10.2019

வயது வரம்பு: 

i) இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள்: 19.07.1995 ஆம் தேதி முதல் 01.07.2000 ஆம் தேதிக்குள் பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும்.

ii) முதுகலைப் பட்டம் பெற்றவர்கள்: 19.07.1992 ஆம் தேதி முதல் 01.07.2000 ஆம் தேதிக்குள்  பிறந்தவர்களாக இருத்தல் வேண்டும்.


கல்வித்தகுதி:

குறைந்தபட்சமாக, இளங்கலைப் பட்டம் (B.A With English / B.Sc with Physics / Chemistry / Mathematics / IT / CS / Statistics / BCA) முதல் அதிகபட்சமாக முதுகலைப் பட்டம் (M.A With English / M.Sc with Physics / Chemistry / Mathematics / IT / CS / Statistics / MCA) வரை படித்து தேர்ச்சி பெற்று அத்துடன் பி.எட் முடித்தவர்களாக இருத்தல் வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:

முகாமில் கலந்து கொள்ளும்போது எடுத்துச்செல்ல வேண்டிய முக்கிய ஆவணங்கள், பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படங்கள், கல்விச்சான்றிதழ்கள், என்.சி.சி சான்று, பள்ளி / கல்லூரி மாற்றுச்சான்றிதழ் (TC),  ஆதார் மற்றும் பான் கார்டு போன்றவற்றை மறக்காமல் எடுத்து  செல்வது அவசியம். 

குறிப்பு:

ஒரிஜினல் மற்றும் 4 தனித்தனி நகல்களையும் எடுத்து செல்ல வேண்டும்.

தேர்வு நடைபெறும் முறை:

உடல் தகுதி தேர்வு, எழுத்துத் தேர்வு போன்ற பல்வேறு தேர்வு முறைகள் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.

ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறும் இடம்:

Indoor Stadium of Dept. of Physical Education, 
Bharathiar University, 
Coimbatore, 
Tamil Nadu - 641046
 

மேலும், இது குறித்த முழுத் தகவல்களை பெற, 
https://airmenselection.cdac.in/CASB/img/upcoming/COIMBATORE%20EDN%20INSTR%20final.pdf - என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close