[X] Close
JUST IN
  • BREAKING-NEWS முன்னாள் மத்திய அமைச்சர் இ.பொன்னுசாமி அதிமுகவிலிருந்து விலகி மீண்டும் பாஜகவில் இணைந்தார்
  • BREAKING-NEWS டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக தலைமை அலுவலகம் நாளை திறப்பு
  • BREAKING-NEWS காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தால் கர்நாடகா எதிர்க்கும் - கர்நாடகா முதல்வர் சித்தராமையா
  • BREAKING-NEWS பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த முறைகேடு குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் - ராகுல் காந்தி
  • BREAKING-NEWS கமல் ஆலோசனை பெறவில்லை; மூத்த தலைவர் என்ற முறையில் மரியாதைக்காக சந்தித்தார் - நல்லகண்ணு
  • BREAKING-NEWS மக்களுக்காக யார் சேவை செய்தாலும் அவர்களை மதிக்க கடமைப்பட்டுள்ளேன் - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவுடன் கமல்ஹாசன் சந்திப்பு

நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி-க்கு முதலிடம்

best-education-institute-chennai-iit-on-top-list

மத்திய அரசு வெளியிட்டுள்ள நாட்டின் சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.

இந்தப் பட்டியலில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு 8-வது இடம் கிடைத்துள்ளது. வேலூர் தொழில்நுட்ப கல்வி குழுமம் 13-வது இடமும், கோவையில் உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரி 33-வது இடமும் பெற்றுள்ளன. இதில் எஸ்ஆர்எம் கல்வி குழுமம் 35-வது இடம் பிடித்துள்ளது.

சிறந்த பல்கலைக்கழகங்களுக்கான பட்டியலில் பெங்களூரு அறிவியியல் கல்வி நிறுவனத்துக்கு முதலிடம் கிடைத்துள்ளது. டெல்லி ஜெ.என்.யூ பல்கலைக்கழகம் 2-வது இடமும், சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 6-வது இடமும், கோவை அமிர்தா பல்கலைக்கழகம் 9-வது இடமும் பிடித்துள்ளன. இதேபோல் கோவை வேளாண் பல்கலைக்கழகம் 20-வது இடமும், எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப கழகம் 34-வது இடமும் பிடித்துள்ளன.

சிறந்த கல்லூரிகளுக்கான பட்டியலில் சென்னை லயோலா கல்லூரி தேசிய அளவில் 2-வது இடம் பிடித்துள்ளது. திருச்சி பிஷப் ஹூபர் கல்லூரி, சென்னை பெண்கள் கல்லூரி, கோவை பிஎஸ்ஜி கல்லூரி, மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி ஆகியவையும் இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close