[X] Close
JUST IN
  • BREAKING-NEWS குஜராத்தில் 2008 ல் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய பயங்கரவாதி டெல்லியில் கைது
  • BREAKING-NEWS பத்மாவத் திரைப்படத்திற்கு தடை நீக்கப்பட்டதை எதிர்த்து ராஜஸ்தான், மத்தியப்பிரதேச அரசுகள் முறையீடு
  • BREAKING-NEWS இந்தியாவின் பெருமை தமிழகத்தில் இருந்து தொடங்கும்- கமல்
  • BREAKING-NEWS சென்னை காமராஜர் சாலையில் இன்று, ஜன.24 மற்றும் குடியரசு தினத்தன்றும் போக்குவரத்து மாற்றம்- காவல்துறை
  • BREAKING-NEWS குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் தற்போது ஒத்திகை நடக்கிறது
  • BREAKING-NEWS 25 நாள் வேலை நிறுத்தத்திற்கு பிறகு சிவகாசி பட்டாசு ஆலைகளில் மீண்டும் உற்பத்தி தொடங்கியது
  • BREAKING-NEWS எம்.எல்.ஏக்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள ஊதியத்தை பெறப்போவதில்லை- டிடிவி தினகரன்
குற்றம் 09 Jul, 2017 06:18 PM

சிகிச்சையின்போது கம்பி நீட்டிய கைதி

prisoner-escape-from-custody

புதுச்சேரியில் சிகிச்சை பெற மருத்துவமனை வந்தபோது தப்பியோடிய கைதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

வடலூரை சேர்ந்த சம்பத்குமார் கடந்த 7ஆம் தேதி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டு புதுச்சேரி காலாப்பேட் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த போது சம்பத்குமார் ஆணியை விழுங்கி தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சம்பத்குமார், கழிவறைக்கு செல்வதாக கூறியுள்ளார். இதற்கு போலீசார் அனுமதியளித்த நிலையில், கழிப்பறைக்கு சென்ற சம்பத்குமார் அங்கிருந்து தப்பித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், தப்பியோடிய கைதி சம்பத்குமாரை பல்வேறு பகுதிகளிலும் தீவிரமாக தேடி வருகின்றனர்.    
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close