[X] Close
JUST IN
 • BREAKING-NEWS நடிகர் விஜயின் கோபத்தின் வெளிப்பாடே மெர்சல் படம்: எஸ்.ஏ.சந்திரசேகர்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் எங்கள் தரப்புக்கே கிடைக்கும்: அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் 4 பேர் தீக்குளித்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை தேவை: மு.க.ஸ்டாலின்
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் இன்று முடிவெடுக்கப்பட வாய்ப்பில்லை: டிடிவி தினகரன்
 • BREAKING-NEWS இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் தொடர்: விராட் கோலி தலைமையில் 16 வீரர்கள் கொண்ட இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் பட்டியலில் இருந்து போலி வாக்காளர்களை தேர்தல் ஆணையம் நீக்க வேண்டும்: திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி
 • BREAKING-NEWS நெல்லை ஆட்சியர் அலுவலகம் எதிரே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிப்பு; 4 பேரும் அரசு மருத்துவமனையில் அனுமதி
 • BREAKING-NEWS முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும்: கேரள முதல்வரிடம் திருமாவளவன் வலியுறுத்தல்
 • BREAKING-NEWS மெர்சல் குறித்து நான் தவறையே பதிவு செய்தேன்; தவறாக பதிவு செய்யவில்லை: தமிழிசை
 • BREAKING-NEWS ரஜினிகாந்தின் 2.O படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 27ஆம் தேதி துபாயில் நடக்கிறது; விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது: இயக்குநர் ஷங்கர்
 • BREAKING-NEWS பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.70.84, டீசல் விலை லிட்டருக்கு ரூ.59.86
 • BREAKING-NEWS மெர்சல் திரைப்படத்தில் முக்கிய பிரச்னைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது; படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்: ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி
 • BREAKING-NEWS கீழடியில் 4ஆம் கட்ட அகழாய்வு பணி விரைவில் தொடங்கும்: அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
குற்றம் 04 Jul, 2017 05:47 PM

காமெடி நடிகர் தாடி பாலாஜி மீது கொலை மிரட்டல் வழக்கு

case-filled-on-actor-balaji

மனைவி அளித்த புகாரைத் தொடர்ந்து நடிகர் தாடி பாலாஜி மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

சினிமாவில் காமெடியனாக நடித்து வரும் தாடி பாலாஜி, தனியார் டிவியின் பல காமெடி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். நடிகர் தாடி பாலாஜி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு, நித்யா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.  இவர்களுக்கு போஷிகா என்ற 6 வயது பெண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் தம்பதியினருக்கு இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பொறுமை இழந்த நித்யா கடந்த மே மாதம் 23 ந்தேதி மாதவரம் போலீசில் புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக்கூறி சில நாட்களுக்கு முன் நித்யா மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் பாலாஜி அவரை தொடர்ந்து கொடுமைப்படுத்துவதாகவும், தாக்குவதாகவும் தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து காவல் ஆணையர் உத்தரவின் பேரில் நித்யாவின் புகார் மாதவரம் போலீசுக்கு மாற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து தாடி பாலாஜி  மீது, பெண் வன்கொடுமை சட்டம், ஆபாசமாக திட்டுதல், தகாத வார்த்தைகளால் தரக்குறைவாக பேசுதல், கொலை மிரட்டல், ஆபத்து ஏற்படுத்தும் வகையில் தாக்கியது என 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close