ரஜினியின் புதிய படத்திற்கு டி இமான் இசையமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ‘தர்பார்’.இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் போதே பொங்கல் அன்று வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்கள் முன்புதான் முற்றிலுமாக முடிவடைந்தது. இப்போது படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன. ‘தர்பார்’ முடிந்தவுடன் ரஜினிகாந்த் அரசியல் கட்சியை தொடங்குவார் எனப் பேசப்பட்டு வந்தது.
ஆனால் சற்றும் எதிர்பார்க்காத நிலையில் மீண்டும் ஒரு புதிய படத்திற்கான அறிவிப்பு வெளியானது. இதற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படாததால் ‘தலைவர்168’ என ஹேஷ்டேக் மூலமே செய்திகள் பரப்பட்டு வருகிறது. இயக்குநர் சிவா, இயக்க இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதில், பிற நடிகர்கள் யார் யார் நடிக்க உள்ளனர் என்ற விவரம் வெளியாகவில்லை.
இப்போது இப்படத்திற்கு டி இமான் இசையமைக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதில் “நாங்கள் மகிழ்ச்சிகரமான அறிவிப்பை வெளியிடுகிறோம். முதன்முறையாக ரஜினியின் ‘தலைவர்168’ படத்திற்கு டி இமான் இசையமைக்க உள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.
ஹெச்.டி.எஃப்.சி வங்கியின் நெட் பேங்கிங் சேவை முடங்கியதாக புகார்
“நான் அப்பவே சொன்னேன்... கோலியை சீண்டாதீர்கள் என்று...” - அமிதாப் பச்சன்
இஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்!
திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஹோட்டலில் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு..?:சென்னை உயர்நீதிமன்றம்
சலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..!
இஸ்ரோவில் வேலை - அப்ரண்டிஸ் பணிகள்!
சலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..!
“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்
“தோனி..தோனி என ரசிகர்கள் கத்தட்டுமே.. பழகிக் கொள்ளுங்கள் ரிஷப்” - கங்குலி அட்வைஸ்