[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மு.க.ஸ்டாலின் மிசா சட்டத்தின் கீழ் கைதாகவில்லை என நான் கூறவில்லை - அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலானதை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன - உள்துறை அமைச்சர் அமித்ஷா
  • BREAKING-NEWS சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; சாதி, மத ரீதியிலான பாரபட்சம் காட்டிய பேராசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஜவாஹிருல்லா
  • BREAKING-NEWS தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் ரூ.2,081 கோடி வாடகை பாக்கியை வசூல் செய்யாமல் ரூ.250 கோடியாக குறைக்க பேரம் நடப்பதாக தகவல் - ஸ்டாலின் ட்வீட்
  • BREAKING-NEWS டெல்லியில் காற்று மாசு காரணமாக மேலும் 2 நாட்களுக்கு பள்ளிகளை மூட வேண்டும் - டெல்லி அரசுக்கு மாநில மாசுக் கட்டுப்பாடு வாரியம் பரிந்து
  • BREAKING-NEWS உத்தர பிரதேசம்: காற்று மாசு காரணமாக கவுதம புத்தா நகர் மாவட்டத்தில் நவ.14, 15ஆம் தேதிகளில் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிப்பு

‘பிகில்’ வெற்றியடைய மண்சோறு சாப்பிட்ட விஜய் ரசிகர்கள்..!

vijay-fans-prayer-for-bigil-success

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள ‘பிகில்’ திரைப்படம் வெற்றி அடைய கோயிலில் மண் சோறு சாப்பிட்டு, மயிலாடுதுறையில் விஜய் ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் பிகில். இப்படம் அக்டோபர் 25-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.  தீபாவளிக்கு வெளியாகவுள்ள ‘பிகில்’ திரைப்படம் வெற்றியடைய வேண்டி, நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், நாகை வடக்கு மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில் பிரசன்ன மாரியம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

விஜய் படம் வெற்றியடைய வேண்டியும், விஜய் நீடுழி வாழ வேண்டியும் அவர்கள் அர்ச்சனை செய்தனர். தொடர்ந்து வடக்கு மாவட்ட தலைவர் குட்டி.கோபி தலைமையில் விஜய் ரசிகர்கள், கோயில் வளாகத்தில் தரையில் மண்சோறு சாப்பிட்டு, பிரார்த்தனை செய்தனர். படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close