[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது அதிமுக
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகள் குறித்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரிய மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
  • BREAKING-NEWS ராகுல்காந்தி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேர்தல் ஆணையத்தில் பாஜக சார்பில் ஸ்மிருதி இரானி புகார் மனு
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தெர்தலில் மதிமுகவிற்கு பம்பரம் சின்னம் ஒதுக்கியது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS தமிழகத்தை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி சோமநாதன் மத்திய நிதி அமைச்சக செயலாளராக நியமனம்

“படம் முழுக்க ரஜினிகூடவே இருப்பேன்” - ‘தர்பார்’ மகிழ்ச்சியில் இளம் நடிகை 

i-ve-scenes-mostly-with-rajini-sir-only-shamata

ரஜினியுடன் நடிப்பது எந்த நடிகர், நடிகைகளுக்கும் செளகர்யமான விஷயமாக இருக்கும் என்று அறிமுக நடிகை ஷமடா கூறியுள்ளார்.

லைக்கா நிறுவனம் தயாரிக்க ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் ‘தர்பார்’. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இதனையடுத்து ரஜினிகாந்த் 5 நாள்கள் ஆன்மிக பயணமாக கடந்த 13 ஆம் தேதி இமயமலை சென்றார். .

இந்நிலையில், ‘தர்பார்’ படத்தில் ரஜினியுடன் நடித்திருப்பதை பற்றி நிவேதிதா தாமஸ் ட்விட்டரில் தகவல் தெரிவித்திருந்தார். அவர் இந்தப் படத்தில் ரஜினியின் மகளாக நடித்திருப்பதாகவும் அதில் கூறியிருந்தார். இவரைப்போல இப்போது ஷமடா ‘தர்பார்’ படத்தில் நடித்திருப்பதை பற்றியும் இந்த வாய்ப்பு எப்படி என்பது பற்றியும் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.  “படத்தை பற்றி எல்லா விஷயங்களையும் நான் சொல்ல முடியாது. எனக்கு அந்தச் சுதந்தரம் இல்லை. என்னுடைய உடையலங்கார வடிவமைப்பாளர் மூலம்தான் இந்த வாய்ப்பு வந்தது. அவர்தான் இயக்குநர் முருகதாஸை அறிமுகப்படுத்தினார். 

அவர் ஏற்கெனவே என் கதாபாத்திரத்தை எழுத்துப்பூர்வமாக எழுதி முடித்திருந்தார். அதற்கு நான் சரியாக இருப்பேன் என்று அவர் நம்பினார். அவர் என் நடிப்பை முன்பே பார்த்திருந்தார். அதனால் கதையை சொன்னார். நான் உடனே நடிக்க ஒப்புக் கொண்டேன்” என்றவர் “இந்தத் ‘தர்பார்’ படத்தில் அதிகபடியான காட்சிகளில் நான் ரஜினிகாந்த் கூடவேதான் வருவேன். அந்த மாதிரியான காட்சிகள்தான் அதிகம். முதல் நாள் ஷுட்டிங் போது நான் பதட்டமாக இருந்தேன். ஆனால் அவர் மிக எளிமையாக இருந்தார். மிக இனிமையான மனிதர். யாராக இருந்தாலும் அவர் உடன் நடிப்பதை செளகர்யமாக நினைப்பார்கள்” என்று கூறியுள்ளார்.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close