[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ‘பிகில்’ சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு தமிழக அரசுக்கு கடிதம்
  • BREAKING-NEWS தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS சென்னையில் பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக காவல் ஆய்வாளர் கைது
  • BREAKING-NEWS தீபாவளிக்காக சென்னையில் 24 மணி நேரமும் மாநகரப் பேருந்துகள் இயங்கும் : போக்குவரத்து துறை

மாஸ்க் அணிந்தபடி நடிகர் விஜய் லண்டன் பயணம் 

vijay-travel-to-london

‘பிகில்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில் ஓய்வுக்காக நடிகர் விஜய் 10 நாட்கள் பயணமாக லண்டன் சென்றுள்ளார். 

‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் அட்லீ, நடிகர் விஜய்யை வைத்து இயக்கியிருக்கும் திரைப்படம் ‘பிகில்’. பெண்கள் கால்பந்தாட்டத்தை மையப்படுத்திய இப் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏ.ஜி.எஸ் எண்டெர்டெயின்மெண்ட் தயாரிக்கும் இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து, நயன்தாரா, கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, விவேக், யோகி பாபு, ஆனந்தராஜ், ரெபா மோனிகா ஜோன், இந்துஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்தின் பாடல்களை, பாடலாசிரியர் விவேக் எழுதியிருக்கிறார். ஏ. ஆர். ரஹ்மான் இதற்கு இசை அமைத்திருக்கிறார். இதையடுத்து இதன் இசை வெளியீட்டு விழா சில நாள் முன் நடைபெற்றது. தீபாவளி அன்று இப்படம் ரிலீஸ் ஆகிறது. 

இதனைத்தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கிறார் என்று அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஓய்வுக்காக நடிகர் விஜய் 10 நாட்கள் பயணமாக லண்டன் சென்றுள்ளார். விமான நிலையத்தில் அவர் மாஸ்க் அணிந்து சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close