[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சூலூர் எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் நேற்று உயிரிழந்ததையடுத்து சூலூர் பேரவை தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு
  • BREAKING-NEWS 2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுகவின் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற எனது தொண்டர்கள் பாடுபடுவர் - அதிமுகவுக்கு ஜெ.தீபா ஆதரவு
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் - அமமுகவின் தேர்தல் அறிக்கை
  • BREAKING-NEWS சென்னையில் உள்ள வக்ஃபு வாரிய அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்; மதுரை வக்ஃபு வாரிய கல்லூரி ஆசிரியர்கள் நியமன முறைகேடு விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரித்து வருகிறது
  • BREAKING-NEWS முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்
  • BREAKING-NEWS திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர் அலிகான் போட்டி; வேட்பு மனு தாக்கல் செய்தார்

இரும்பு வேலி சரிந்து விபத்து: ஓடிச்சென்று காப்பாற்றிய விஜய்!

actor-vijay-protects-his-fans-once-the-fence-falls-down

ரசிகர்களின் கூட்டத்தால் சரிந்து விழும் இரும்பு வேலியை நடிகர் விஜய் தாங்கிப்பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

‘சர்கார்’ படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிப்படாத விஜயின் 63வது திரைப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப்படத்தில் நயன்தாரா,கதிர், விவேக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

 கடந்த ஜனவரி மாதத்தில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. இடையே இடைவெளி விடப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் விஜயை காண ரசிகர்கள் குவிவதும், அவர்களை விஜய் சந்தித்து கையசைப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. சமீபத்தில் காரில் செல்லும் விஜயை இரு சக்கர வாகனத்தில் சென்ற ரசிகர்கள் துரத்திச்சென்று கையசைத்தனர், அவர்களுக்கு சைகையால் அறிவுரை கூறிய விஜய், அவர்களை அங்கிருந்து போகச்சொன்னார். 

இந்நிலையில் விஜயை பார்க்க ரசிகர்கள் கூடியதால் இரும்பு வேலி சரிந்துவிழும் வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இரும்பு வேலிக்கு அந்தப்பக்கம் நிற்கும் ரசிகர்கள் முண்டியடித்துக்கொண்டு விஜயை பார்த்து கையசைக்கின்றன. கூட்டம் அதிகரிக்கவே இரும்பு வேலி விஜய் நிற்கும் பக்கமாக சாய்கிறது. உடனே சுதாரித்துக்கொண்ட விஜய் இரும்புவேலியை தாங்கிப்பிடிக்கிறார். சிறிது நேரத்தில் படக்குழுவினரைச் சேர்ந்த பலரும் இரும்பு வேலியை தாங்கிப்பிடித்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.  

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close