தனது 63வது படப்பிடிப்பின்போது, காரிலிருந்து இறங்கி ரசிகர்களுக்கு விஜய் கை அசைக்கும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பெயரிடப்படாத ‘தளபதி63’ படத்தின் படப்பிடிப்பிடிப்பு நடைபெற்று வருகின்றது. இந்தப் படத்தின் பூஜை அண்மையில் நடைப்பெற்றது. இந்தப் படம் விஜய் மற்றும் அட்லி இணையும் மூன்றாவது திரைப்படம் ஆகும். ஏற்கனவே இருவரும் இணைந்த ‘தெறி’ மற்றும் ’மெர்சல்’ ஆகிய படங்கள் வெற்றி பெற்றதால், இந்தப் படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.
இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். படத்தின் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இதுதவிர யோகி பாபு மற்றும் கதிர் உள்ளிட்டோர் படத்தில் இடம்பெறுகின்றனர். கல்பாத்தி அகோரம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விஜய் இருப்பதை அறிந்து அங்கு அவரது ரசிகர்கள் திரண்டுவிட்டனர்.
இதனால் படப்பிடிப்பு தளத்தின் பின்புற வாசல் வழியாக சென்றுவிடும்படியும், காரில் இருந்து இறங்க வேண்டாம் என்று அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பவுன்சர்கள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைவார்கள் என்பதால், காரில் இருந்து இறங்கி தனது ரசிகர்களை பார்த்து கை அசைத்தார். இந்த வீடியோ தற்போது விஜய் ரசிகர்களால் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
சுவர் எழுப்பும் விவகாரம் - தேசிய நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார் ட்ரம்ப்
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு - கே.எல்.ராகுல் உள்ளே.. தினேஷ் வெளியே
பாலியல் வன்கொடுமை: கொலை செய்த இளைஞருக்கு சாகும்வரை தூக்கு
“பொதுமக்கள் போல் ஊடுருவி பயங்கரவாதிகள் தாக்குதல்” - சிஆர்பிஎப் அறிக்கை
“போதும்..போதும்.. மன்னிக்க முடியாத காட்டுமிராண்டி செயல் இது” - ரஜினி கடும் கண்டனம்
மீண்டும் 'சர்ஜிகல் ஸ்டிரைக்கா' இல்லை நேரடி தாக்குதலா ? உரி முதல் புலவாமா வரை !
அடுத்தடுத்த அதிரடி நகர்வுகள்: தேர்தலை குறிவைத்து முன்னேறுகிறாரா மம்தா?
ரயில்வே 2019 - 2020: தென் மாவட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறுமா ?
கலைப் படைப்பா ? ஆபாச படைப்பா ? எல்லை மீறுகின்றனவா 'வெப் சீரிஸ்'
சினிமா ரசிகர்களே அஜித் அறிக்கையில் வரும் அந்த இரண்டு வரியை கவனியுங்கள் !