[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசு குறைந்து ரூ.4.08ஆக நிர்ணயம்
  • BREAKING-NEWS 2013-2017 வரை ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் அமமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் நவ.24 முதல் 29ஆம் தேதி வரை மாவட்ட அமமுக அலுவலகங்களில் விருப்பமனு அளிக்கலாம் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS கோவையில் இளம்பெண் விபத்தில் சிக்கிய இடத்தில் கொடிக்கம்பம் ஏதும் இல்லை - உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
  • BREAKING-NEWS எஸ்பிஜி பாதுகாப்பை விலக்கிக் கொள்ளும் மசோதாவை தாக்கல் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • BREAKING-NEWS இந்தியாவிலேயே அதிக மருத்துவர்கள் கொண்ட மாநிலங்களில் தமிழகம் 2வது இடம்; மகாராஷ்டிரா முதல் இடம் - மத்திய அரசு
  • BREAKING-NEWS சிவசேனா, தேசியவாத காங்., காங்கிரஸ் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைத்தாலும் நிலைக்காது - நிதின் கட்கரி

பிரபல இந்தி நடிகர் காதர் கான் பற்றி வதந்தி: மகன் மறுப்பு!

kader-khan-is-in-hospital-son-dismisses-death-rumours

பிரபல இந்தி நடிகர் காதர் கான் நலமாக இருப்பதாக, அவர் மகனும் இந்தி நடிகருமான சர்பிராஸ் கான் தெரிவித்துள்ளார்.

பிரபல இந்தி நடிகர் காதர் கான். இவர் சுமார் 300 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். 250 படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். காமெடி, குணசித்தி ரம், வில்லன் என பல வேடங்களில் நடித்துள்ள இவர், கனடாவில் இப்போது இருக்கிறார். இவருக்கு 81 வயது.  கடந்த சில நாட்க ளுக்கு முன் திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது, கானுக்கு. இதனால் கனடாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இதைக் கேள்விபட்ட இந்தி நடிகர் அமிதாப் பச்சன் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்திப்பதாக ட்விட்டரில் கருத்துத் தெரி வித்திருந்தார். அமிதாப் பச்சன் அவருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து பல நடிகர், நடிகைகள் அவர் நலம்பெற பிரார் த்திப்பதாகக் கூறியிருந்தனர்.

இந்நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக செய்திகள் வெளியாயின. இதனால் பலர் அவர் மகனும் இந்தி நடிகருமான சர்பிராஸ் கானிடம்  விசாரித்து வந்தனர்.  

அவர், தனது தந்தை நலமுடன் மருத்துவமனையில் இருக்கிறார் என்றும் தவறான வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண் டுள்ளார்.

காதர் கான், ஆப்கானிஸ்தானின் காபூலில் பிறந்தவர். மும்பையில் சிவில் என்ஜினீயர் படிப்பை முடித்த அவர், 1973 ம் ஆண்டு ராஜேஷ் கண்ணா வின் ’தாக்’ என்ற படம் மூலம் சினிமாவுக்கு நடிகராக அறிமுகமானார். 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close