[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தேர்வு அறிவிப்பாணை முறையாக இல்லாததால் உடற்கல்வி சிறப்பாசிரியர் பணிக்குத் தேர்வானோர் பட்டியலை ரத்து செய்து உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
  • BREAKING-NEWS தமிழகத்தின் இசைவின்றி காவிரியில் அணை கட்டக்கூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிடக் கோரும் தீர்மானம் தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்
  • BREAKING-NEWS காவிரி பிரச்னையில் மத்திய அரசு ஒருதலைபட்சமாக செயல்படுவது வருத்தம் அளிக்கிறது - மேகதாது அணை தொடர்பான தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேச்சு
  • BREAKING-NEWS தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக்கூட்டத்தில், காவிரியில் கர்நாடகா மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் முன்மொழியிடப்பட்டது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று இரவும் நாளையும் விட்டு விட்டு மழை தொடரும்; ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மீதான குற்றச்சாட்டு பற்றிய வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நெஞ்சுவலி காரணமாக மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

விமான நிலையத்தில் கீழே விழுந்தார்: ‘மகாபாரதம்’ இயக்குனர் படுகாயம்!

filmmaker-shrikumar-menon-injured

மும்பை விமான நிலையத்தில் கீழே விழுந்த ’மகாபாரதம்’ படத்தின் இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் படுகாயம் அடைந்தார்.

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவர் ஸ்ரீகுமார் மேனன். விளம்பர படங்கள் மூலம் பிரபலமானவர். இவர் இயக்கிய பல விளம்பர படங்கள் புகழ்பெற்றவை. அதில் ஒன்று கல்யாண் ஜூவல்லர்ஸ். இவர் இப்போது மோகன்லால், பிரகாஷ்ராஜ், மஞ்சுவாரியர் நடித்துள்ள 'ஒடியான்' என்ற படத்தை இயக்கியுள்ளார்.

(ஒடியான் படத்தில் மோகன்லால்)

பேண்டஸி த்ரில்லர் படமான இது இந்தப் படம் அடுத்த மாதம் 14 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இதற்கான போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் மும்பை மற்றும் சென்னையில் நடந்து வருகிறது.

படத்தின் வேலைக்காக மும்பை சென்றிருந்த இவர், கடந்த 17 ஆம் தேதி கொச்சி திரும்ப முடிவு செய்திருந்தார். மும்பை விமான நிலையம் வந்த அவர், எஸ்கலேட்டரில் ஏறினார். அப்போது நிலைதடுமாறி தலைகுப்புற கீழே விழுந்தார்.

இதில் அவர் முகத்தாடையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் அங்குள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காயம் பலமாக இருப்பதால் அவர் இரண்டு வாரங்களுக்கு மேல் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இவர்தான், பிரபல மலையாள எழுத்தாளரும் இயக்குனருமான எம்.டி.வாசுதேவன் நாயர், மகாபாரதத்தைத் தழுவி எழுதியுள்ள ’ரெண்டாமூழம்’ நாவலை படமாக இயக்க இருக்கிறார். ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் திரைப்படமாகும் இந்தப் படத்தில் மோகன்லால் பீமனாக நடிக்கிறார். பீமனின் பார்வையில் மகாபாரதத்தைச் சொல்வது போல கதை அமைக்கப் பட்டுள்ளது

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close