[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

விரைவில் ‘சர்கார்’ ஹெச்.டி பிரிண்ட் - தமிழ் ராக்கர்ஸ் மிரட்டல்

tamilrokers-threaten-to-sarkar-movie

‘சர்கார்’படத்தை இணையதளத்தில் வெளியிட உயர்நீதிமன்றம் தடைவிதித்திருந்த நிலையில் ‘சர்கார்’ படத்தின் ஹெச்.டி பிரிண்ட் விரைவில் இணைதளத்தில் வெளியிடப்படும் என தமிழ்ராக்கர்ஸ் பெயரில் ட்வீட் செய்யப்பட்டுள்ளது. இது விஜய் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் நாளை வெளியாக உள்ள திரைப்படம் ‘சர்கார்’. இப்படத்தின் கதைத் திருட்டு குறித்த சர்ச்சை முடிவுக்கு வந்த நிலையில் படம் திரைக்கு வருகிறது.

இந்தப் படத்தை தியேட்டர்கள் தவிர வேறு எந்த வடிவத்திலும் வெளியிடக்கூடாது என படத்தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. 

அதில், ‘சர்கார்’ படத்தின் விநியோகம், சிடி, டிவிடி, கேபிள் டிவி, இணையதள ஒளிபரப்பு உள்ளிட்ட அனைத்து உரிமங்களும் தங்களிடமே உள்ளதாகவும் தியேட்டர் தவிர வேறு எந்த வடிவிலும் ‘சர்கார்’ படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் ‘சர்கார்’ படத்தை இணையதளத்திலோ, சேனல்களிலோ, செல்போனிலோ, சிடி, டிவிடி, கேபிள் டிவியிலோ வெளியிடக்கூடாது எனத் தடை விதித்தது. 

இந்நிலையில், ‘சர்கார்’ படத்தின் ஹெச்.டி பிரிண்ட் விரைவில் இணைதளத்தில் வெளியிடப்படும்  என தமிழ்ராக்கர்ஸ் பெயரில் ட்வீட் செய்யப்பட்டுள்ளது. இது விஜய் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close