[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கஜா புயலால் வீடுகளை இழந்த 50 விவசாயிகளுக்கு வீடு கட்டித்தரப்படும் - நடிகர் ராகவா லாரன்ஸ்
  • BREAKING-NEWS நக்கீரன் கோபாலுக்கு எதிரான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல்துறைக்கு டிச.21ம் தேதி வரை தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS தொடர் மழையால் வேலூர், திருவாரூர், புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS தொடர் மழையால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரத்தில் பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.78.88 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.74.99 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஓசூர் அருகே தம்பதி ஆணவக்கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சூடுகொண்டப்பள்ளியில் நந்தீஷ் பெற்றோரிடம் எஸ்.சி., எஸ்.டி ஆணைய துணைத்தலைவர் முருகன் விசாரணை
  • BREAKING-NEWS மறைந்த மத்திய அமைச்சர் அனந்த்குமாரின் தொகுதியான தெற்கு பெங்களூரு காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

வைரமுத்துவை குற்றம் சாட்டுவதன் பின் அரசியல் - சீமான்

seeman-said-about-chinmayi-and-vairamuthu

கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி எழுப்பியுள்ள குற்றச்சாட்டின் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தேகித்துள்ளார்.

மீடூ என்ற ஹேஸ்டேக்கில் பல துறைகளில் உள்ள பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை தெரிவித்து வருகின்றனர். அதன்படி, வைரமுத்து மீது சின்மயி பாலியல் புகார்களை தெரிவித்து வருகிறார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தன் மீது வழக்குத் தொடர்ந்தால் சந்திக்க தயார் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சீமான், “வைரமுத்து தமிழ் இனத்தின் அடையாளம். அவர் மீது இப்போது இந்த குற்றச்சாட்டை சொல்வதால், இதன் பின்னணியில் அரசியல் செல்வாக்கு இருக்கிறதா? என எண்ணத் தோன்றுகிறது. எல்லா கற்களும் வைரமுத்துவை நோக்கியே திரும்புவது ஏன்? பிராமணர் சங்கத் தலைவர் நாராயணன் மீதான குற்றச்சாட்டு குறித்து பலரும் பேச மறுப்பது ஏன்? பல்வேறு பாலியல் வன்கொடுமைகள் தமிழகத்தில் நடைபெற்றபோது, இவ்வளவு குரல் வராதது ஏன்? நியாயவாதிகளும், குற்றமற்றவர்களும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்படுகிறார்கள். சின்மயி புதிய தலைமுறை நேர்காணலில் சட்டப்படி நடவடிக்கை இதற்கு எடுக்க முடியாது என்கிறார். அப்போது வைரமுத்துவிற்கு அரசியல் செல்வாக்கு இருந்தது என்கிறார். அப்போதைவிட இப்போதுதான் வைரமுத்துவிற்கு அதிக செல்வாக்கு உள்ளது. குழு அமைத்து பெண்களை பாதுகாக்க வேண்டிய நிலை வந்ததற்கு நாம் வருத்தப்பட வேண்டும்” என்று கூறியுள்ளார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close