[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

அக்டோபர் 19ல் விஜய்யின் ‘சர்கார்’ டீசர்

vijay-s-sarkar-teaser-will-release-on-october-19

‘சர்கார்’ படத்தின் டீசர் அக்டோபர் 19, மாலை 6 மணிக்கு டீசர் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது

‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து ‘சர்கார்’ படத்தில் விஜய் நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்தப் படத்தில், விஜய் அரசியல்வாதியாக நடிக்கிறார் எனத் தெரிகிறது. படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலக்ஷ்மி சரத்குமார், யோகி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் சர்காரின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.அதில் பேசிய நடிகர் விஜய், மெர்சல் திரைப்படத்தில் கொஞ்சம் அரசியல் இருந்தது. சர்காரில் அரசியல் மெர்சலாக உள்ளது என பல்வேறு அரசியல் பஞ்ச்களை பேசி கைதட்டல் வாங்கினார். அதன்பின்னர் அவரின் மேடைப்பேச்சுக்கு பலரும் கலவையான விமர்சன கருத்துகளை முன்வைத்தனர். இந்நிலையில் சர்காரின் டீசர் வெளியீடு குறித்து தயாரிப்பு நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 19, மாலை 6 மணிக்கு டீசர் வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது.

‘சர்கார்’ அரசியல் படம் எனத் தெரிந்த நிலையில், டீசரில் அரசியல் வசனங்கள் ஏதும் இடம்பெறுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close