[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.41 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 68.83 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS திமுக எம்எல்ஏக்கள் மட்டுமல்ல தமிழகமே அதிமுக ஆட்சி கலைய காத்துக்கொண்டிருக்கிறது - கனிமொழி
  • BREAKING-NEWS பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக மனு

ரஜினியின் ‘2.0’ டீசரில் ஒளிந்திருக்கும் உண்மைகளை கண்டுபிடித்தீர்களா?

rajini-s-2-0-teaser-reviews

ரஜினியின் ‘2.0’ பட டீசரில் சில புதிர் முடிச்சுகள் ஒளிந்துள்ளன. அது குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு ஊகங்கள் வெளியாகி வருகின்றன.

விஎஃப்எக்ஸ் பிரச்னை, படத்தை வடிவமைப்பதில் பிரச்னை, பட்ஜெட் பிராப்ளம், இப்படி ‘2.0’ பற்றி பல வதந்திகள். அனைத்தையும் தாண்டி தடம் பதித்திருக்கிறது ஷங்கரின் ‘2.0’ டீசர். ‘இரும்பிலே ஒரு இருதயம்’ முளைத்து ஐஸ்வர்யா ராயுடன் லவ் டுயட் பாடிய ரோபோர்ட் இப்போது ‘2.0’வில் என்ன செய்ய போகிறது என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு. அதற்கு அழகாக ‘2.0’ டீசர் மூலம் உருவம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் ஷங்கர்.

இன்று காலை டீசர் வெளியானது முதலே ரஜினியின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளம் குளிர்ந்து போய் இருக்கிறார்கள். டீசரும் யுடியூப்பில் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஏறக்குறையை மதியம் 4 மணி வாக்கில் டீசரை 50 லட்சம் பேர் கண்டுகளித்திருப்பதாக தெரியவந்துள்ளது.

அது சரி, டீசரில் மறைந்திருக்கும் மர்ம முடிச்சுகள் என்ன?  

‘2.0’ டீசரில் பல முடிச்சுகள் உள்ளன. முதல் முடிச்சு, செல்போன் டவரில் இருந்து தொடங்குகிறது. அந்த டவரின் மேல் யாரோ தொடங்குவதை போல சிஜி செய்யப்பட்டுள்ளது. அனேகமாக அது அக்ஷ்யை குமாராக இருக்க வேண்டும். இல்லை செல்போன் சுனாமி போன்று சுழன்று கொல்லத்துடிக்கும் ஐஸ்வரி கணேசனாககூட இருக்கலாம். டவரில் தொங்கும் ‘பாடி’யை சுற்றி பறவைகள் பறக்கின்றன. மேலும் ஒரு கருப்புக் கண்ணாடி ஒன்று சிக்கிக் கொண்டு தொங்குகிறது.

அதேபோல செல்போன்கள் எல்லாம் பறந்து போவதை போல வரும் சிஜி காட்சிகளில் காட்சிகளை ஷங்கர் எடுத்து சில வருடங்கள் இருக்கும் போல. ஏனெனில், அந்தக் காட்சியில் காட்டப்படும் போன்கள் லூமியா 36 மாடலாக உள்ளது. இவ்வளவு பழைய மொபைல் போன்கள் காட்டப்படுவதால் இக்காட்சிகள் எடுத்து பல காலம் ஆகியிருக்கலாம் என்கிறார்கள் சில திரை ரசிகர்கள். 

வானில் ரஜினிகாந்த் வாயை பிளந்து கொண்டு பார்க்கும் காட்சியில் தெரியும் அக்ஷ்யை குமாரின் உருவம் முழுக்க முழுக்க செல்போன்களை வைத்து உருவம் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தக் காட்சியில் ரஜினியின் ஆச்சர்ய முகம் அந்தக் காட்சியை அவர் முதன்முறைகாக படத்தில் பார்க்கும் காட்சியாக இருக்கலாம் என தெரியவருகிறது. மேலும் அக்காட்சியில் எமிஜாக்சன் உடன் நிற்பதால் அவர் வசீகரன் ரஜினியுடன் தொழில் நுட்ப உதவியாளராக படத்தில் வருவார் என்றும் புரிந்துக் கொள்ளலாம். 

சிட்டி ரோபோ நடந்து செல்லும் காட்சியில் கட்டடத்தின் கண்ணாடிக்கு வெளியே ராட்சச கழுகு ஒன்று அந்தக் கண்ணாடியை உடைப்பதை போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அவ்வளவு பெரிய கழுகு வரும் போது சிட்டி ஏன் கொஞ்சம் கூட சலனப்படாமல் நடக்கிறார். மிகப் பெரிய கால் பந்தாட்ட மைதானத்தில் நின்று கொண்டு அக்ஷ்யை குமார் தன் விரல்களை சிமிட்டுகிறார். அதன் பின் அங்குள்ள செல்போன்கள் எல்லாம் ரோபோவை போல வடிவம் எடுத்து படையாக திரள ஆரம்பிக்கின்றன. அனேகமாக அது ஒரு இடைவேளை காட்சியாக இருக்கக்கூடும். அந்த மைதானத்தில் சிட்டி ரஜினியும் இருக்கிறார். அவர் முகத்தில் ஒரு பதட்டம் தெரிகிறது. ஆகவே அவர் அதை முன்கூட்டியே தீர்மானித்திருக்க மாட்டார் என்பதாக அக்காட்சி நமக்கு துப்புக் கொடுக்கிறது. 

அதேபோல ஒரு ராணுவ வாகனம் வெடிப்பதைபோல வரும் காட்சியில் அங்குள்ள வாகனத்தின் வண்டி நம்பர் ஆந்திர ரிஜிஸ்டேஷனாக உள்ளது. அப்போது கதை களம் கொஞ்சம் ஆந்திராவை மையமிட்டுள்ளதாக புரிந்துக் கொள்ள செய்கிறது. நமது புரிதல் சரியானதுதானா என்பதை படம் வெளியான பிறகே தெரியவரும். இந்தக் குறிப்பிட்ட வெடிக்குண்டு சம்பவம் செல்போன் டவரை கட்டுமானம் செய்யும் போது நடக்கலாம். அந்த வெடி விபத்தில்தான் வில்லன் இருக்கிறானா என்பதும் தெரியவில்லை. 

டீசரில் வரும் ரஜினி அவ்வளவு தத்துரூபமாக இல்லை. ஏதோ மொழுக்கட்டையாக இருக்கிறார். பழைய ‘எந்திரன்’ அளவுக்கு ஒரு தெளிவு இதில் இல்லை என்றும் திரை ரசிகர்கள் கருத்துட்டு வருகிறார்கள். கடைசியாக வரும் ஒரு கூண்டிற்குள் அந்த கழுகு அடைக்கப்படுகிறது. அந்தக் கூண்டே நூற்றுக்கணக்கான சிட்டிகளால் செய்யப்பட்டிருக்கிறது. 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close