[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசுக்கு தமிழக அரசு அழுத்தம் தர வேண்டும்; மேகதாது அணை கட்டுவதற்கு உச்சநீதிமன்றத்தில் உடனடியாக தடை பெற வேண்டும் - மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் மம்தா பானர்ஜியால் பெரிய அளவில் வெற்றி பெற முடியாது; கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் மிகக் குறைவாகவே கூட்டம் கூடியது - கே.பாலகிருஷ்ணன்
  • BREAKING-NEWS வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்யலாம் என தவறான தகவலை பரப்பியதாக லண்டனில் நடந்த நிகழ்ச்சி தொடர்பாகவும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மீதும் டெல்லி போலீசில் தேர்தல் ஆணையம் புகார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி உறுதி - மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே
  • BREAKING-NEWS தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்குவது தாமதமாகும்; மத்திய தடுப்பு மருந்து தொழில்நுட்பக்குழு பரிந்துரையால் பிப்.3ல் போலியோ சொட்டு மருந்து முகாம் இல்லை - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS பட்டாசு ஆலை தொடர்பான வழக்கில் விசாரணையை 29ம் தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS அதிமுக உள்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது - தம்பிதுரை எம்.பி.

’நடிக்க தயாரா?’ லாரன்ஸ் சவாலை ஏற்றார் ஸ்ரீரெட்டி!

sri-reddy-takes-ragava-lawarance-challenge

பட வாய்ப்பு தருவதாகக் கூறி தெலுங்கு திரையுலகினர் தன்னை பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக்கொண்டனர் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி.

அடுத்து தமிழ் சினிமா பிரபலங்கள் மீது புகார்களை கூறினார். இயக்குனர் முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், சுந்தர்.சி, ராகவா லாரன்ஸ் ஆகியோர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை வைத்திருந்தார். இது தமிழ், தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ராகவா லாரன்ஸ், ஸ்ரீரெட்டியின் குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளித்திருந்தார். 

’நான் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு ஸ்ரீரெட்டி வந்ததாகவும், அங்கு நான் அவரை தவறாக பயன்படுத்தியதாகவும் கூறியுள்ளார். அந்த ஓட்டல் அறையில் கடவுளின் புகைப்படம் மற்றும் ருத்ராட்ச மாலையை பார்த்ததாகவும் கூறியிருக்கிறார். ஓட்டல்களில் பூஜை செய்ய, ருத்ராட்ச மாலையை எடுத்துச் செல்ல, நான் ஒன்றும் முட்டாள் இல்லை. நான் அவருக்கு எந்தவிதமான தீங்கும் செய்யவில்லை என்பது எனக்கும், கடவுளுக்கும் தெரியும். இதற்கு பிறகும் அவர் மீது கோபம் இல்லை. உங்கள் மீது பரிதாபப்படுகிறேன். உங்கள் பிரச்சனைதான் என்ன? வாய்ப்பு தருவதாகக் கூறி அனைவரும் உங்களை ஏமாற்றி விட்டார்கள் என்பது தானே?

தான் ஒரு சிறந்த நடிகை என்று கூறிகிறீர்கள். நாம் செய்தியாளர்களை சந்திப்போம். அவர்கள் முன்பு நான் உங்களுக்கு ஒரு கேரக்டர் கொடுத்து நடிக்கச் சொல்கிறேன். மேலும் சில எளிமையான நடனமும் நீங்கள் ஆட வேண்டும். உங்களிடம் திறமை இருப்பதை நீங்கள் நிரூபித்தால், அது இயக்குநராக எனக்குப் பிடித்திருந்தால் எனது அடுத்த படத்தில் உங்களுக்கு வாய்ப்பு தருகிறேன். ஒருவேளை அனைவர் முன்பும் நடித்துக் காட்ட விருப்பமில்லை எனில், உங்களது வழக்கறிஞர் மற்றும் உங்கள் நலம் விரும்பிகள் முன்பு நடித்துக் காட்டுங்கள். கண்டிப்பாக வாய்ப்பு வழங்குகிறேன்’ என்று சவால் விட்டிருந்தார்.

அதை ஏற்றுக்கொண்ட ஸ்ரீரெட்டி, தனது முகப்புத்தகத்தில், ’லாரன்ஸின் சவாலை ஏற்றுக்கொள்கிறேன். என்னை வாழ்த்துங்கள்’ என்று கூறிவிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தான், என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்டாக நடித்துக்கொண்டிருக்கும் படத்தில் இருந்து சில வசனங்களை பேசி நடிப்பது போல வீடியோவை வெளியிட்டு, அதில் சில மோசமான வசனங்களும் இடம்பெற்றிருக்கிறது என்று கூறியிருந்தார். 
அந்த வீடியோ இப்போது டெலிட் ஆகியுள்ளது.


 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close