[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சந்திராயன் - 2 ஜனவரியில் ஜிஎஸ்எல்வி மார்க் 3 தொழில்நுட்ப ராக்கெட் மூலமே ஏவப்படும் - இஸ்ரோ தலைவர் சிவன்
  • BREAKING-NEWS ஜிசாட்-29 செயற்கைக்கோளுடன் விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி- மார்க் 3 ராக்கெட்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.80.42 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.76.30 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை

மிங்கிள் ஆனார் ஹிப் ஹாப் ஆதி!

hiphop-tamizha-got-engaged

இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் ஆதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

இண்டிபெண்டண்ட் ஆல்பம் மூலம் பிரபலமானவர் ஹிப் ஹாப் ஆதி. ஹிப் ஹாப் தமிழா என்றும் அழைக்கப்படுகிறார். கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான 'ஆம்பள' படம் மூலம் கோலிவுட் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தற்போது  பாடகர், பாடலாசிரியர், இயக்குநர், நடிகர் என பல அவதாரங்களில் ஜொலிக்கிறார். சமீபத்தில் சுந்தர்.சி தயாரிப்பில் இயக்குநராகவும் களமிறங்கிய ஹிப் ஹாப் ஆதி 'மீசைய முறுக்கு' படத்தின் மூலம் ஹீரோவானார். படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதுமட்டுமில்லாமல் இவருக்கு ஏராளமான பெண் ரசிகர்களும் உள்ளனர்.

இந்நிலையில் ஆதியின் நிச்சயதார்த்தம் திருப்பதியில் நடைபெற்றுள்ளது. மிகவும் தெரிந்த நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்துள்ளனர். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், இனிமேல் தான் சிங்கிள் இல்லை என தெரிவித்துள்ளார். மேலும் உங்களின் வாழ்த்துகள்  எங்களுக்கு நிச்சயம் தேவை என குறிப்பிட்டுள்ள அவர், உங்கள் வாழ்த்துக்களோடு எங்கள் பயணம் இனிதே ஆரம்பமாகியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

போட்டோ கேலரி

1 of 4

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close