[X] Close
JUST IN
 • BREAKING-NEWS தமிழகத்தில் கல்வி புரட்சி செய்தவர் காமராஜர்: மாஃபா பாண்டியராஜன்
 • BREAKING-NEWS திண்டுக்கல் மாவட்டத்தில் ஜிகா வைரஸ் இருப்பதை அரசு கண்டுபிடித்துள்ளது: அமைச்சர் விஜயாஸ்கர்
 • BREAKING-NEWS கீழடியில் அகழ்வாராய்ச்சி பணிகளை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்: தமிமுன் அன்சாரி
 • BREAKING-NEWS தமிழகத்தில் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
 • BREAKING-NEWS அப்போலோவில் ஜெயலலிதா இருந்தபோது நான் அவரை பார்க்கவில்லை: வெற்றிவேல்
 • BREAKING-NEWS சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் கல்லீரல் சிகிச்சை பிரிவில் மின்கசிவால் தீ விபத்து
 • BREAKING-NEWS விமானப் பயணத்திற்கு இனி அடையாள அட்டை தேவையில்லை..!
 • BREAKING-NEWS திருவள்ளூர் ஆட்சியர், தமிழக வருவாய் துறை செயலாளருக்கு இந்த மாத சம்பளம் வழங்க தடை
 • BREAKING-NEWS குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலம் என்ற இலக்கை நோக்கி அரசு செல்கிறது: நிலோபர் கபில்
 • BREAKING-NEWS கிரிக்கெட் போட்டிகளில் புதிய விதிமுறைகள் செப்.28 க்கு பிறகு அமலுக்கு வரும் என ஐசிசி அறிவிப்பு
 • BREAKING-NEWS பா.ஜ.க.வுடன் கைகோர்க்கவும் தயார்: கமல்ஹாசன்
 • BREAKING-NEWS தீபாவளிக்கு வெளியூர் செல்ல அக்டோபர் 15 முதல் 17 வரை சிறப்புப் பேருந்துகள்: அமைச்சர் விஜயபாஸ்கர்
 • BREAKING-NEWS அக்டோபர் 3 ஆம் தேதி முதல் டெல்லி மெட்ரோ ரயில் கட்டணம் ரூ. 10 உயர்த்தப்படுகிறது
 • BREAKING-NEWS மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் ஜெனிபாவுக்கு கத்திக்குத்து
சினிமா 10 Sep, 2017 11:25 AM

பிரபல நடிகை குமாரி ராதா காலமானார்

veteran-actress-kumari-radha-died

பிரபல நடிகை குமாரி ராதா பெங்களூரில் இன்று காலமானார். அவருக்கு வயது 70. 

1964-ல் ராஜ்குமார் ஜோடியாக நவகோட்டி நாராயணா’ என்ற கன்னட படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் பி.வி.ராதா. ராஜலட்சுமி என்ற இயற்பெயர் கொண்ட இவர், சினிமாவுக்காக பெயரை பி.வி.ராதா என்று மாற்றிக்கொண்டார். 

தமிழில் 1965-ம் ஆண்டு வெளியான எம்.ஜி.ஆரின் ‘தாழம்பூ’ இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. தமிழுக்காக, குமாரி ராதா என்ற பெயரில் நடித்த இவர், ஜெய்சங்கர் நடித்த ’யார் நீ’, ’காதலித்தால் போதுமா?’, ’சிஐடி சங்கர்’ உட்பட பல படங்களில் நடித்தார். சிவாஜி, என்.டி.ராமராவ், ஜெமினி கணேசன், நாகேஸ்வர ராவ் உட்பட பல்வேறு நடிகர்களுடன் நடித்துள்ள இவர், கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், துளு, இந்தி ஆகிய மொழிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

பெங்களூரில் வசித்து வந்த இவர், கடந்த சில வருடங்களுக்கு முன் கேன்சரால் பாதிக்கப்பட்டிருந்தார். பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தார். இந்நிலையில் இன்று காலை மரணமடைந்தார். குமாரி ராதாவின் உடல் அவர் ஆசைப்படி, மருத்துவக் கல்லூரிக்கு தானமாக கொடுக்கப்பட இருக்கிறது. 

இவரது கணவர் பிரபல இயக்குனர், நடிகர், கே.எஸ்.எல்.சாமி 2015-ம் ஆண்டு காலமானார். மறைந்த ராதாவுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close