[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஆர்.கே. நகரில் டிடிவி தினகரன் ஆதரவாளரிடமிருந்து ரூ. 20 லட்சம் பறிமுதல்
 • BREAKING-NEWS ஒகி புயல் பாதிப்பு குறித்த அறிக்கையை இன்று மத்திய அரசுக்கு அனுப்புகிறது தமிழக அரசு
 • BREAKING-NEWS கொளத்தூர் செல்லப்பிள்ளை என்றாலும் ஆர்.கே. நகரை வளர்ப்புப் பிள்ளையாக கருதி வளர்ச்சிபெற வைப்பேன் - மு.க. ஸ்டாலின்
 • BREAKING-NEWS பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் சென்னை ஆய்வாளர் முனிசேகர் மீது ராஜஸ்தான் மாநிலம் போலீசார் வழக்குப்பதிவு
 • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வுக்கூட்டங்களில் பங்கேற்க வேண்டாம் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்த வேண்டும்- ப. சிதம்பரம்
 • BREAKING-NEWS நாகை: கடல் சீற்றத்தால் வேதாரண்யம் பகுதி மீனவர்கள் 2ஆவது நாளாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை
 • BREAKING-NEWS கச்சத்தீவு அருகே மீன்பிடித்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கல்வீசித் தாக்குதல்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்கக்கோரி தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் திமுகவினர் புகார் மனு
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்த சதி நடைபெறுகிறது: திருமாவளவன்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் மக்கள் டிடிவி தினகரனை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS நாகையில் போராட்டம் நடத்த வந்த ஹெச்.ராஜாவை வஞ்சியூரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்
 • BREAKING-NEWS பணப்பட்டுவாடா செய்தால் தேர்தலை ரத்து செய்வது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: திருமாவளவன்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டையில் உள்ள பிசியோதெரபி கிளினிக்கில் கணக்கில் வராத ரூ.13 லட்சம் பறிமுதல்
 • BREAKING-NEWS இருண்டு கிடக்கும் தமிழகத்திற்கு இடைத்தேர்தல் முடிவு வெளிச்சத்தை பாய்ச்சட்டும்- ஸ்டாலின்
சினிமா 10 Aug, 2017 09:49 AM

கார்கள் தொங்கும் தோட்டத்தில் பிரபுதேவா!

new-set-for-prabhu-deva-s-movie

பிரபுதேவா, ஹன்சிகா ரேவதி, ஆனந்தராஜ், மன்சூர் அலிகான், முனீஸ்காந்த் உட்பட பலர் நடிக்கும் படம், 'குலேபகாவலி' . கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் சார்பாக கோட்டப்பாடி.ஜே.ராஜேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை, எஸ்.கல்யாண் இயக்குகிறார்.  விவேக் - மெர்வின் இசை அமைக்கின்றனர். ஆனந்த குமார் ஒளிப்பதிவு செய்கிறார். 

இந்தப் படத்துக்காக, பாபிலோன் தொங்கும் தோட்டம் போல, கார்கள் தொங்கும் தோட்டத்தை மினியேச்சர் அமைத்து கொடுத்து அசத்தினார்  ஆர்ட் டைரக்டர் கதிர். பின்னர், சென்னை அருகே 10 ஏக்கர் நிலத்தில் இந்த தோட்டம் ஏராளமான பொருட்செலவில் அமைக்கப்பட்டது. ஐந்நூருக்கும் மேற்பட்ட தொழிளார்களின் உழைப்பில் சுமார் நூறுவிதமான கார்களை கொண்டு இந்தத் தோட்டம் இருபத்தைந்து நாட்களில் உருவாக்கப்பட்டது. பின்னர் இதில் பிரபுதேவாவின் அறிமுக பாடல் காட்சி எடுக்கப்பட்டது. முன்னணி தெலுங்கு நடன இயக்குனர் ஜானி நடனம் அமைத்தார். பிரபுதேவாவுடன் மும்பை, பெங்களூர், ஐதராபாத் மற்றும் சென்னையை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் பங்கேற்றனர்.
 
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close