[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அதிமுக அரசு விரைவில் ஜனநாயக ரீதியில் வீழ்த்தப்படும்: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ஆட்சி நிர்வாகத்தில் தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்: திருமாவளவன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் பேரவையை கலைத்துவிட்டு தேர்தலை நடத்த வேண்டும்: கார்த்தி சிதம்பரம்
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: முதுகுளத்தூர் - கடலாடி காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு
  • BREAKING-NEWS பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் மோசடி செய்து கொளையடித்து வந்த கும்பல் கைது
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலுள்ள லே பகுதிக்கு குடியரசுத் தலைவர் நாளை செல்கிறார்
  • BREAKING-NEWS இரு அணிகளும் விரைவில் இணையும் அதற்கான பேச்சுவார்த்தை நடக்கிறது: எம்.பி.வைத்திலிங்கம்
  • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு
  • BREAKING-NEWS கோலியுடன் மரம் நடும் அனுஷ்கா
  • BREAKING-NEWS அதிமுக எனும் பேருந்தை முதல்வர் சரியாக ஓட்டிச் செல்கிறார்: எம்எல்ஏ முருகுமாறன்
  • BREAKING-NEWS பேரம் படிந்துவிட்டதால் இரு அணிகளும் இணைகிறது: எம்எல்ஏ வெற்றிவேல்
  • BREAKING-NEWS பதவி, பேரம் படியாததால் அணிகள் இணைப்பில் தாமதம்: புகழேந்தி
  • BREAKING-NEWS 99 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் சூரிய கிரகணத்தால் பாதிப்பா..?
  • BREAKING-NEWS தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது: திருநாவுக்கரசர்
சினிமா 02 Aug, 2017 05:30 PM

‘வேலைநிறுத்தம்’ எனக்கு பிடிக்காத வார்த்தை: ரஜினிகாந்த் அறிக்கை

i-do-not-like-strike-rajinikanth-statement

திரைப்படத் தொழிலாளர் பிரச்னைக்கு சுமுகமான தீர்வு காண வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ரஜினிகாந்த், தனக்குப் பிடிக்காத சில சொற்களில் வேலைநிறுத்தம் என்பதும் ஒன்று என கூறியுள்ளார். எந்தப் பிரச்னையாக இருந்தாலும் சுய கவுரவம் பார்க்காமல் பொது நலம் மட்டுமே கருதி அன்பான வார்த்தைகளில் பேசி தீர்வு காணலாம் என்றும் ரஜினி குறிப்பிட்டுள்ளார். தயாரிப்பாளர் சங்கமும் ஃபெஃப்சி சம்மேளனமும் கலந்து பேசி தீர்வு காண வேண்டுமென மூத்த கலைஞன் என்ற முறையில் கேட்டுக்கொள்வதாக ரஜினி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஃபெஃப்சி தொழிலாளர்களுக்கும் தயாரிப்பாளர் சங்கத்துக்கும் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, நேற்று முதல் ஃபெஃப்சி தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, ஃபெஃப்சி அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி இது குறித்து ரஜினியை நேரில் சந்தித்துப் பேசியிருந்தார். திரைப்படத் தொழிலாளர் பிரச்னையில் நடிகர் ரஜினியின் காலா படப்பிடிப்பு ரத்தாகியுள்ளது குறிப்பிடத்தக்கது‌.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close