[X] Close
JUST IN
 • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியின் தலைவராக முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார் ராகுல் காந்தி
 • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வு அவரது அதிகாரத்துக்கு உட்பட்டது
 • BREAKING-NEWS தூத்துக்குடி அருகே கடலில் நாட்டுப்படகு பழுதாகி மூழ்கியதில் மீனவர் கென்னடி உயிரிழப்பு
 • BREAKING-NEWS நீர்மட்டம் குறைந்ததால் வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீராகாததால் 16வது நாளாக குளிக்க தடை விதிப்பு
 • BREAKING-NEWS அண்ணா அறிவாலயத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி வருகை
 • BREAKING-NEWS டிடிவி தினகரன் யார்?, கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை: முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரப்புரை
 • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரப்புரை
 • BREAKING-NEWS உடல்நலன் கருதி அரசியலில் இருந்து விலக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி முடிவெடுத்திருப்பதாக தகவல்
 • BREAKING-NEWS ராஜஸ்தானில் கொள்ளையன் நாதுராமின் கூட்டாளிகள் 4 பேர் கைது
 • BREAKING-NEWS வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் செல்போன், டிவிக்கான சுங்கவரி 10% இருந்து 20% உயர்வு- மத்திய அரசு
 • BREAKING-NEWS அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31 வரை அவகாசம்- உச்சநீதிமன்றம்
 • BREAKING-NEWS கடலூரில் ஆய்வு மேற்கொள்ள சென்ற ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி பேரணி
சினிமா 01 Aug, 2017 11:56 AM

குடும்பம் இருப்பதால் என்னால் அப்படி நடிக்க முடியாது: கஜோல்

i-can-not-act-like-a-family-because-kajol

திரைத்துறையில் அடியெடுத்து வைத்து 25 ஆண்டுகளை கடந்துவிட்டார், தங்கத்தாமரை மகள் கஜோல்.

1992 ஆம் ஆண்டு ஷாருக் கான் நாயகியாக அவர் அறிமுகமான பெகுடி படம் ஆகஸ்டு 1 ஆம் தேதி ரிலீஸானது. இன்றோடு திரைத்துறைக்கு வந்து 25 ஆண்டுகளை கடந்துவிட்டது தொடர்பாக கஜோல் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். தற்போது தமிழில் அவர் நடித்துள்ள விஐபி-2 படமும் (ஆகஸ்ட் மாதம்) இம்மாதம் ரிலீசாக இருக்கிறது. 25-வது ஆண்டில் தான் நடித்த படம் தமிழில் ரிலீஸ் ஆவதால் தமிழக ரசிகர்களுக்கும் அவர் நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இந்தி நடிகர் அஜய் தேவ்கானை திருமணம் செய்து கொண்ட கஜோலுக்கு நியாஸா என்ற மகளும், யுக் என்ற மகனும் உள்ளனர். தனது 25-வது ஆண்டு கொண்டாட்டம் குறித்து அவர் கூறுகையில், பாலிவுட்டில் ஷாருக் கானும், நானும் பொருத்தமான ஜோடியாக அமைந்தோம். அதன்பிறகு இன்றுவரை எங்களைப்போல் ஒரு ஜோடி அமையவில்லை. படங்களில் நடிப்பதை குறைத்துவிட்டேன். தற்போது தமிழில் நல்ல கதை அமைந்ததால் விஐபி-2 படத்தில் நடித்துள்ளேன். மீண்டும் பிஸியாக நடிப்பீர்களா எனக் கேட்கிறார்கள். எனக்கு குழந்தைகள் இருக்கிறது. அவர்களை வளர்க்கும் பொறுப்பு இருக்கிறது. எனவே இப்போது அதிக படங்களை ஏற்க முடியாது.

சினிமாவில் தொடர்ந்து நடிக்க வேண்டுமென்றால் என் மனதை கவரும் சப்ஜெக்டாக இருக்க வேண்டும். டர்ட்டி பிக்சர் போன்ற படங்களில் நான் நடிக்க மாட்டேன். எனக்கு குடும்பம், குழந்தை, கணவர் இருக்கிறார். ஒரு சில அம்சங்கள் எனக்கு பொருந்தாதவையாக உள்ளன. எனவே அவற்றை ஏற்கமாட்டேன். ‘டர்ட்டி பிக்சர் போன்ற கதாபாத்திரங்களுக்கு நியாயம் கற்பிக்கும் வகையில் என்னால் நடிக்க முடியாது’ என்கிறார் கஜோல். கஜோல் ஏற்கனவே தமிழில் மின்சாரக்கனவு படத்தில் நடித்துள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close