[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவின் கருத்து கேட்பு கூட்டம்
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை

கதை போதும்: ஜிஎஸ்டியை வீழ்த்திய விக்ரம் வேதா, மீசைய முறுக்கு!

films-with-content-help-tn-theatres-beat-gst-blues

ஜிஎஸ்டி வரிவிதிப்பால் தமிழ்த் திரையுலகம் கடும் விளைவை சந்திக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அதையும் தாண்டி ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்து வந்திருப்பது தமிழ்த் திரையுலகை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. 

கடந்த வெள்ளிக்கிழமை வெளியான, ’விக்ரம் வேதா’, ’மீசைய முறுக்கு’  படங்களுக்கு தமிழகம் முழுவதும் நல்ல ஓபனிங் கிடைத்திருக்கிறது. இதே போல ஆங்கில படமான, கிறிஸ்டோபர் நோலனின், ’டுன்கிர்க்’, சாய் பல்லவி நடித்துள்ள தெலுங்கு படமான, ‘பிடா’ ஆகிய திரைப்படங்களும் நல்ல ஓபனிங்கை பெற்றுள்ளன.
ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக டிக்கெட் விலை அதிகரித்துள்ளதால், ரசிகர்கள் தியேட்டருக்கு வருவது குறையும் என்ற நிலை இருந்தது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் வெளியான படங்கள் அந்தப் பாதிப்பில் இருந்தன. ஆனால், விக்ரம்வேதா, மீசைய முறுக்கு படங்கள் நல்ல வசூலை பெற்றிருப்பது திரைத்துறையினர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

‘நல்ல கதையை கொண்ட படங்களாக இருந்தால் ரசிகர்கள் தியேட்டருக்கு தேடி வருவார்கள் என்பதை இந்தப் படங்கள் நிரூபித்திருக்கின்றன’ என்கிறார்கள் சினிமா துறையினர். 
‘கடந்த மூன்று நாட்களாக, இந்தப் படங்கள் சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கின்றன. வரும் வாரம் வரை ஹவுஸ்புல்லாக புக்கிங் நடந்துள்ளது’ என்கிறார் ஈசிஆர் தியேட்டர் ஒன்றின் மேலாளர்.

Advertisement:
Related Tags : GSTTamil cinemaVikram-VedhaMeesaiyai Murukku
Advertisement:
Advertisement:
[X] Close