சென்னையில் இருந்து புறநகர் பகுதிக்கு குறைந்த அளவிலான எண்ணிக்கையில் மின்சார ரயில்கள் இயக்கப்படுவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
சென்னையிலிருந்து திருவள்ளுர் வரையிலான வழித்தடம், சென்னை கடற்கரை முதல் எழும்பூர் வரியிலான வழித்தடம் மற்றும் சென்னையில் இருந்து செங்கல்பட்டு வரையிலான வழித்தடம் ஆகியவற்றில் பாராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் ரயில்கள் குறைவாக இயக்கப்படுகின்றன. இது வாரம்தோறும் நடைபெறும் வழக்கமான நடைமுறைதான் எனக் கூறப்படுகிறது.
பேருந்து கட்டண உயர்வுக்கு பிறகு ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் ரயில்கள் குறைவாக இயக்கப்படுவதால் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் விடுமுறை நாட்களில் வண்டலூர் விலங்கியல் பூங்கா உள்ளிட்ட இடங்களுக்கு குடும்பத்துடன் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் மதியத்திற்கு பிறகு வழக்கமான எண்ணிக்கையில் ரயில்கள் இயக்கப்படும் என்பதால் மக்களின் சிரமம் குறையும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Loading More post
கொரோனா 4-ஆம் அலை மிக ஆபத்தானது; தனியார் மருத்துவமனையை நோக்கி ஓடாதீர்கள்: டெல்லி முதல்வர்
"வாக்குச்சாவடியில் சிஐஎஸ்எப் நடத்தியது இனப்படுகொலை!" - மேற்கு வங்க முதல்வர் மம்தா ஆவேசம்
”பொதுத்தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்!” - மாணவர்களைப் பாதுகாக்க சோனு சூட் வேண்டுகோள்
தொடங்கியது தடுப்பூசி திருவிழா: கொரோனா பரவலைத் தடுக்க பிரதமர் மோடியின் 4 கோரிக்கைகள்!
நாட்டில் புதிய உச்சம்: 1.50 லட்சத்தை கடந்த தினசரி கொரோனா பாதிப்பு; ஒரேநாளில் 839 பேர் பலி