[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வரும்காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு பாஜக அரசு பாதுகாப்பாக இருக்கும் என மோடி பேசியது ஆறுதல்- திருமாவளவன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஜூன் 3ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன்
  • BREAKING-NEWS 5 ஆண்டுகள் விரைவாக சென்றுவிடும் என்பதால் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி நிச்சயம் வருவார்- திருநாவுக்கரசர்
  • BREAKING-NEWS சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தனியார் குடிநீர் லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்த வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்
  • BREAKING-NEWS காவிரி ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை கட்ட கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்பதை வலியுறுத்த தமிழக அரசு முடிவு
  • BREAKING-NEWS பல வாக்குச்சாவடிகளில் அமமுகவுக்கான வாக்குகள் ‘பூஜ்யம்’ என காட்டியுள்ளது; எங்கள் முகவர்கள் போட்ட ஓட்டு எங்கே? - டிடிவி தினகரன்

தன்பாலின ஈர்ப்பாளரா? ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் அதிரடி விளக்கம்!

cricketer-james-faulkner-says-he-is-not-gay

’நான், தன் பாலின ஈர்ப்பாளன் இல்லை’ என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜேம்ஸ் பாக்னர் விளக்கம் அளித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஜேம்ஸ் பாக்னர். இவர்,  தனது 29 வது பிறந்த நாளை சனிக்கிழமை கொண்டாடினார். தன் தாயுடனும், ஆண் நண்பருடன் கொண்டாடிய பாக்னர், அது தொடர்பான புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில் ’’பாய்பிரண்ட்’ என்று குறிப்பிட்ட விஷயம் ஆஸ்திரேலிய மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது அவர் தன்பாலின ஈர்ப்பாளர் என்றும் அவர் நண்பரும் அவரும் ஒன்றாக வாழ்ந்துவருவதாகவும் செய்திகள் வெளியாயின.

இந்நிலையில் தான் ’கே’ இல்லை என்றும் அந்த பதிவு தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டிருப்பதாகவும் பாக்னர் இன்று விளக்கம் அளித்துள்ளார். பாய்பிரண்ட் என்பதை பெஸ்ட் பிரண்ட் என்று மாற்றியுள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, ‘’எனது பதிவு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டு விட்டது. நான் தன்பாலின ஈர்ப்பாளன் இல்லை. ஆனால், எனது பதிவைப் பார்த்துவிட்டு, தன் பாலின ஈர்ப்பாளர்களின் பெரிய ஆதரவு கிடைத்தது. அந்த புகைப்படத்தில் இருப்பது எனது சிறந்த நண்பர்’’ என்று தெரிவித்துள்ளார்.


 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close