puthiyathalaimurai

சவுதியில் போர் பதற்றம்.. இண்டிகோ விமானங்கள் ரத்து!
சவுதியில் பாதுகாப்பு நெருக்கடி காரணமாக, அக்டோபர் 17 வரை ரியாத், ஜெட்டா, தம்மாம், மதீனா நகரங்களுக்கு இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பயணிகள் விமான நிலையை இணையதளத்தில் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். பாதுகாப்பே முதன்மை என நிறுவனம் தெரிவித்துள்ளது.

செய்தியாளர் - M.மீரா

சவுதி அரேபியாவில் நிலவி வரும் பாதுகாப்பு நெருக்கடி காரணமாக, ரியாத், ஜெட்டா, தம்மாம் மற்றும் மதீனா ஆகிய நகரங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் அனைத்து விமானங்களையும் அக்டோபர் 17-ஆம் தேதி வரை ரத்து செய்வதாக இண்டிகோ விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், சவுதியில் நிலவும் சூழலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ தெரிவித்துள்ளது. விமானப் பயணிகள் விமான நிலையத்திற்குப் புறப்படுவதற்கு முன்பு, இண்டிகோவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தங்களது விமானத்தின் நிலையைச் சரிபார்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Airport attack

மேலும், பயணச்சீட்டு முன்பதிவின்போது வழங்கப்பட்ட தொடர்பு விவரங்கள் மூலம் பயணிகளுக்கு அவ்வப்போது தகவல்கள் தெரிவிக்கப்படும் என்றும், சந்தேகங்கள் மற்றும் உதவிகளுக்காக வாடிக்கையாளர் சேவைக் குழுவைத் தொடர்புகொள்ளலாம் என்றும் இண்டிகோ கூறியுள்ளது. பயணிகளின் பாதுகாப்பே தங்களது முதன்மையான நோக்கம் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

16 வயது சிறுமியிடம் அத்துமீறிய ரோபோ! ஜெர்மனியில் அதிர்ச்சி சம்பவம்!

இதற்கிடையே, சவுதி தலைநகர் ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையம் சனிக்கிழமை வரை மூடப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் தயார்நிலையை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சவுதி சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக கிங் காலித் சர்வதேச விமான நிலையம் மீது ஹவுதிப் படை  நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், 12 பேர் உயிரிழந்திருக்கின்றனர். 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கின்றனர். இது, கிங் காலித் விமான நிலையம் மீது ஒரே வாரத்தில் ஹவுதி நடத்திய 3-வது மற்றும் மிகப்பெரிய தாக்குதலாக கருதப்படுகிறது.

smoke near Riyadh airport

திங்கள்கிழமை இரவு, ஏமனின் ஹவுதி  அமைப்பினர் ரியாத் விமான நிலையத்தை நோக்கி பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகக் கூறினர். இதற்கு முன்னதாக, ரியாத்தை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையை இடைமறித்து அழித்ததாக சவுதி அரசு தெரிவித்திருந்தது.

தொடர்ந்து அதிகரிக்கும் தாக்குதல் அச்சுறுத்தல்களால் சவுதிக்கான விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஏர்போர்ட் மீது ஏவுகணைத் தாக்குதல்.. தொடரும் ஹவுதியின் 'Attack' பதிலடிக்கு தயாராகும் சவுதி?

அரிசி விலை உயர்வு.. ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய கோரிக்கை!
குறுவை நெல் சாகுபடிப் பரப்பு 17.5 லட்சம் ஹெக்டேரிலிருந்து 12.5 லட்சம் ஹெக்டேராக குறைந்ததால், அரிசி விலை அதிகரித்துள்ளது. சன்ன ரக அரிசி மற்றும் அதி-சன்ன ரக அரிசி விலைகள் கடந்த பத்து நாட்களில் குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளன.

தமிழ்நாட்டில் குறுவை நெல் சாகுபடிப் பரப்பு குறைந்துள்ளதே அரிசி விலை அதிகரித்துள்ளதற்கான காரணம் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

rice

தமிழ்நாட்டில் கடந்த பத்து நாட்களில் சன்ன ரக அரிசி விலை கிலோவுக்கு  ரூபாய் வரையும், அதி-சன்ன ரக அரிசி விலை கிலோவுக்கு 9 ரூபாய் வரையும் உயர்ந்துள்ளது. 26 கிலோ அரிசிப் பையின் விலை நூற்று நாற்பது ரூபாய் முதல் இருநூற்று முப்பது ரூபாய் வரை உயர்ந்துள்ளது. மேட்டூர் அணை தாமதமாகத் திறக்கப்பட்டதால் குறுவை நெல் சாகுபடி பரப்பு பதினேழரை லட்சம் ஹெக்டேரிலிருந்து பன்னிரண்டரை லட்சம் ஹெக்டேராகச் சுமார் ஐந்து லட்சம் ஹெக்டர் குறைந்துள்ளது.

பருவமழை பொய்த்துபோனதன் எதிரொலி.. தமிழ்நாட்டில் அரிசி விலை கிடுகிடு உயர்வு!!

ஈரான் போர் எதிரொலி.. பாசுமதி அரிசி ஏற்றுமதி பாதிப்பு!

மேலும், பிற மாநிலங்களில் இருந்து அரிசி வரத்து குறைந்தது, உரக் கூலி மற்றும் எரிபொருள் செலவு அதிகரித்தது, நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குவிண்டாலுக்கு இரண்டாயிரத்து எழுநூற்று ஐம்பது ரூபாயாக உயர்ந்தது ஆகியவையே இந்த அரிசி விலை உயர்வுக்கு முக்கியக் காரணங்களாகும். நெல் சாகுபடி 28 சதவீதம் குறைந்திருந்தாலும் தமிழ்நாட்டில் அரிசித் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

rice

வரவிருக்கும் சம்பா சாகுபடி அறுவடைக்குப் பிறகு அரிசி விலை சீரடையும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 25 கிலோ வரையிலான அரிசி பைகள் மீதான ஐந்து சதவீத ஜி.எஸ்.டி வரியை அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.

அடுத்த 2 நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடக்கம்! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

பதில் சொல்ல மாட்டீங்களா மினிஸ்டர் சார்? செய்தியாளர் கேள்விக்கு பதில் சொல்லாமல் சென்ற அமைச்சர்!

யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதல் ஏன்? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!
தமிழகத்தில் மின்சார தேவை அதிகரித்ததால், உச்ச நேரங்களில் பயன்பாட்டுக்காக 15 நாட்களுக்கு மட்டும் ரூ.35-க்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மின்வெட்டு தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்தார். நீண்டகால ஒப்பந்தங்கள் மற்றும் லைவ் டேட்டா வசதிகள் விரைவில் செயல்படுத்தப்படும் எனவும் கூறினார்.

தமிழகத்தில் மின்பற்றாக்குறையைச் சமாளிக்க ஒரு யூனிட் மின்சாரத்தை சராசரியாக ரூ.35 விலையில் கொள்முதல் செய்ய மின்வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், ஏற்கெனவே ரூ.2.47 லட்சம் கோடி கடனில் உள்ள மின்வாரியத்தின் நிதிநிலை மேலும் மோசமடையக்கூடும் என்றும், இதே நிலை நீடித்தால் மின்கட்டண உயர்வுக்கான சூழல் உருவாகலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மேலும் திமுக ஆட்சியில் ரூ.5.40 முதல் ரூ.9.50 வரை விலையில் மட்டுமே மின்சாரம் கொள்முதல் செய்ததாகவும், தற்போது ஏன் இவ்வளவு விலையில் கொள்முதல் செய்யவேண்டும் என்ற கேள்வியும் எழுப்பப்படுகிறது.

மின்சாரம்

இந்நிலையில் இவ்விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “தமிழகத்தில் மின் கொள்முதல் தொடர்பாக தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர், மாலை 6 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையிலான உச்சபட்ச மின் தேவை நேரங்களில் (Peak Hours) பயன்படுத்துவதற்காக மின்சாரம் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டுள்ளது. தீபவளி, கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்களில் மக்கள் எந்தவித சிரமத்தையும் அனுபவிக்கக் கூடாது என்பதற்காக அடுத்த 15 நாட்களுக்கு மட்டுமே கொள்முதல் செய்யப்படவிருக்கிறது. விரைவில் நீண்ட கால ஒப்பந்தம் செய்யப்படவிருக்கிறது. நீண்ட கால ஒப்பந்தம் திமுக காலத்தில் போடப்படவில்லை. தெளிவான நிர்வாகத்தையும் அவர்கள் செய்யவில்லை, எவ்வளவு உற்பத்தித்திறன் யாரிடம் இருந்து வருகிறது என்ற லைவ் டேட்டா விபரமும் இல்லை. விரைவில் லைவ் டேட்டா கொடுக்க வேண்டும் என அறிவிறுத்தியுள்ளோம். இதில் எந்த தவறும், முறைகேடும் நடக்கவில்லை, அப்படியான அரசும் இது இல்லை என கூறியுள்ளார்.

யாரும் செய்யாததை செய்த விஜய்.. 'ராகுல் - விஜய் - மோடி' சந்திப்பில் நடந்தது என்ன?

ஏன் அதிக விலையில் கொள்முதல்?

தொடர்ந்து பேசிய அவர், 3,500 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய டெண்டர் கோரப்பட்டிருந்தாலும், 1,500 மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் 16,000 மெகாவாட்டாக இருந்த மின் தேவை, இந்த ஆண்டு 21,000 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது. வெயிலின் தாக்கம் குறையாததால் மின் தேவை அதிகரித்துள்ளது. நெய்வேலியில் (NLC) கிடைக்க வேண்டிய 1,800 மெகாவாட் மின்சாரம் கிடைக்கவில்லை, காற்றாலை மின்சாரம் மூலம் கிடைக்க வேண்டிய 3,000 மெகாவாட் மின்சாரமும் கிடைக்கவில்லை.

ஒன்றிய மின் தொகுப்பிலிருந்தும் போதிய மின்சாரம் கிடைக்காததால், அதிக விலை கொடுத்து மின்சாரத்தைக் கொள்முதல் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே கிடைக்க வேண்டிய மின்சாரம் கிடைக்காத நிலையில், மின் தேவையும் அதிகரித்துள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் விலை கொடுத்து மின்சாரம் வாங்காவிட்டால் இரண்டு முதல் மூன்று மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படுத்த வேண்டிய நிலை உருவாகும்.

பிரதமருடன் முதல்வர் விஜய் சந்திப்பு : அடுத்த நாளே நடந்த அரசியல் மாற்றம்!

அசாம் மாநில அரசிடமிருந்து கடந்த வாரம் 400 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது, தேவையான பிற வழிகளில் மின்சாரம் வாங்கிய பின்னரே தற்போது 15 நாட்களுக்குக் கூடுதல் மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது மட்டும் இல்லாமல் தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகைக் காலங்களிலும் அதிகரிக்கும் மின் தேவையைச் சமாளிக்கக் கூடுதல் மின்சாரம் கொள்முதல் செய்யத் திட்டமிட்டுள்ளது, நீண்டகால மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்கள் மேற்கொள்வதற்கான பணிகளும் இந்த மாதம் தொடங்க உள்ளது.

கடந்த ஆட்சியில் நீண்ட கால கொள்முதல் செய்வதற்கான எந்த பணிகளும் நடைபெறவில்லை. ஆனால் தற்போது இதனை எல்லாம் சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம், இது மட்டும் இல்லாமல் சோலார் மூலம் யார் யாரிடம் இருந்து எவ்வளவு மின்சாரம் வாங்கப்படுகிறது என முறையான தகவல்கள் எதுவுமே இல்லாத நிலை உள்ளது. முழுமையாக ஆன்லைன் மூலம் இதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 4 மாதத்தில் யாருக்கும் புதிதாக ஒப்பந்தம் சோலார் முறையில் வழங்கப்படவில்லை.

தமிழகத்தில் தற்போது கூடுதலாக தேவையாகி உள்ள 4500 மெகா வாட் மின்சாரத்தையும் 35 ரூபாய்க்கு வாங்க வில்லை. 1500 மெகாவாட் மின்சாரம் மட்டுமே வாங்கப்படவிருக்கிறது. நம்மால் முடிந்த இடங்களில் எல்லாம் மின்சாரத்தை குறைந்த விலையில் வாங்கிவிட்டு தான் இந்த பணிகளை தொடங்கி உள்ளோம், 16 நாட்களுக்கு மட்டுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதல்.. டி.ஆர்.பி. ராஜா,  அன்புமணி, டிடிவி தினகரன் கண்டனம்!

யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதல்.. டி.ஆர்.பி. ராஜா, அன்புமணி, டிடிவி தினகரன் கண்டனம்!
தமிழகத்தில் மின்சாரத்தை ரூ.35-க்கு கொள்முதல் செய்ததைத் தொடர்ந்து, டி.ஆர்.பி. ராஜா, அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். மின்வாரியத்தின் நிதிநிலை மோசமடையும் என எச்சரித்து, மாநிலத்தின் சொந்த மின் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் மின்பற்றாக்குறையைச் சமாளிக்க ஒரு யூனிட் மின்சாரத்தை சராசரியாக ரூ.35 விலையில் கொள்முதல் செய்ய மின்வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், தமிழக அரசின் மின்சாரக்கொள்முதல் நடவடிக்கைக்கு திமுக அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

திமுக ஆட்சியில் ரூ.5.40 முதல் ரூ.9.50 வரை விலையில் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள டி.ஆர்.பி. ராஜா, தற்போது ரூ.35 முதல் ரூ.37 வரை விலை கொடுத்து மின்சாரம் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதாக விமர்சித்துள்ளார்.

power cut

தூத்துக்குடி, வடசென்னை அனல்மின் நிலையங்களில் நிலக்கரி இருப்பு மற்றும் திட்டமிடல் குறைபாடுகளால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அரசின் நடவடிக்கைகளால் மக்களின் வரிப்பணம் வீணாவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

6 அதிமுக MLA-க்கள் ராஜிநாமா விவகாரம்.. சபாநாயகர் நடவடிக்கை செல்லும் என நீதிமன்றம் உத்தரவு!

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 4,500 மெகாவாட் மின்சாரத்தை சராசரியாக ஒரு யூனிட் ரூ.35-க்கு வாங்குவதால் மின்வாரியத்திற்கு பெரும் நிதிச்சுமை ஏற்படும் எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே ரூ.2.47 லட்சம் கோடி கடனில் உள்ள மின்வாரியத்தின் நிதிநிலை மேலும் மோசமடையக்கூடும் என்றும், இதே நிலை நீடித்தால் மின்கட்டண உயர்வுக்கான சூழல் உருவாகலாம் என்றும் எச்சரித்துள்ளார். மேலும், முடிக்கப்படாமல் உள்ள அனல்மின் திட்டங்களை விரைந்து நிறைவேற்றுவதுடன், திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் நிறைவு கால அட்டவணையை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Power supply lines

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆட்சியில் குறுகிய கால மின்சாரக் கொள்முதலைக் குறைத்து மாதந்தோறும் ரூ.200 கோடி சேமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறிய தமிழக அரசு, தற்போது அதே நடைமுறையில் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவது முரண்பாடாக இருப்பதாக விமர்சித்துள்ளார்.

பிரதமருடன் முதல்வர் விஜய் சந்திப்பு : அடுத்த நாளே நடந்த அரசியல் மாற்றம்!

தமிழகத்தில் மின்வெட்டைக் கண்டித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பின்னரும், மின்தட்டுப்பாடு இல்லை எனக் கூறிய அமைச்சர்கள், தற்போது அதிக விலைக்கு மின்சாரம் வாங்க வேண்டியதன் அவசியத்தை விளக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

electricity

மின்சாரத்தை அதிக விலைக்கு கொள்முதல் செய்வதைத் தவிர்த்து, மாநிலத்தின் சொந்த மின் உற்பத்தியை அதிகரிக்கவும், நிலுவையில் உள்ள அனல்மின் திட்டங்களை விரைந்து முடிக்கவும், மக்களுக்கு தடையற்ற மின்சாரம் வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மூன்று தலைவர்களின் அறிக்கைகளிலும் முன்வைக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கையாகும்.

இந்தியாவில் 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மின் பற்றாக்குறை.. தமிழகத்துக்கும் Shock!

தீபாவளி 2026| சூர்யா vs நயன்தாரா vs விஜய் ஆண்டனி! பாக்ஸ் ஆபீஸில் ஜெயிக்கப்போவது யார்?
இந்த தீபாவளி, சூர்யாவின் 'Scene', நயன்தாராவின் 'மூக்குத்தி அம்மன் 2', விஜய் ஆண்டனியின் 'அப்பா குட்டி', பிரபுதேவாவின் 'Moonwalk' ஆகிய நான்கு முக்கிய படங்கள் ஒரே நாளில் வெளியாக உள்ளன. திரையரங்க போட்டி, ரசிகர்களின் எதிர்பார்ப்பு மற்றும் பாக்ஸ் ஆபிஸ் வெற்றி குறித்து பரபரப்பான சூழல் உருவாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் தீபாவளி ரிலீஸ் என்பது மிக முக்கியமான சம்பவம். குறிப்பாக, தீபாவளிக்கு முன்னணி நடிகர்களின் படங்கள் திரையரங்குகளில் நேருக்கு நேர் மோதும் போட்டி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். இந்த ஆண்டு தீபாவளிக்கு என்னென்ன படங்கள் வருகிறது, போட்டி நிலவரம் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.

Suriya

1. சூர்யாவின் ‘Scene’

சூர்யாவின் 47-வது திரைப்படம் ‘Scene’, இந்த ஆண்டு தீபாவளி ரேஸில் முக்கியமான படமாக உருவெடுத்துள்ளது. மலையாளத்தில் ‘ஆவேஷம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஜித்து மாதவன் இப்படத்தை இயக்கியுள்ளார். சூர்யா இதில் இன்பராஜ் என்ற வித்தியாசமான காவல்துறை அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நஸ்ரியா நசீம், நஸ்லென், லுங்கி பாய்ஸ் ராஜ்பிரியன் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். சூர்யாவின் புதிய தோற்றம், ஜித்து மாதவனின் இயக்கம் மற்றும் வித்தியாசமான கதைக்களம் ஆகியவை படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. படம் நவம்பர் 6, 2026 அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா-க்கு SK பதிலடியா? வன்மத்தை இப்படி கக்குறாங்களே? நடந்தது என்ன?

2. நயன்தாராவின் ‘மூக்குத்தி அம்மன் 2’ – பிரம்மாண்டமாகத் திரும்பும் அம்மன்

2020-ல் நேரடியாக ஓடிடியில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘மூக்குத்தி அம்மன் 2’ உருவாகியுள்ளது. இந்த முறை சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா மீண்டும் அம்மன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

Mookuthi Amman 2

‘ரைஸ் ஆஃப் மஹாசக்தி’ என்ற பெயரில் வெளியான டீசர், புராணப் பின்னணி, ஆபத்தில் இருக்கும் ஓர் அரச குடும்பம் மற்றும் நிகழ்காலத்தில் ஏற்படும் பேரிடர் போன்ற அம்சங்களைக் காட்டியுள்ளது. முதல் பாகத்தைவிடப் பிரம்மாண்டமான காட்சிகளுடன் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார்.

நயன்தாராவின் நடிப்பு, ஆன்மிக அம்சங்கள், ஃபேண்டஸி காட்சிகள் எனப் பல அம்சங்களைக் கொண்ட இப்படம் நவம்பர் 6-ம் தேதி வெளியாகிறது. சூர்யாவின் ‘Scene’ படத்துடன் நேரடியாக மோதுவதால், இந்தப் படத்தின் மீதும் பெரிய கவனம் இருக்கிறது.

ரஜினி சார் முன்னாடி.. நான் அப்படி பயந்ததில்ல! கை எல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடுச்சு! - வித்யா பாலன்

3. விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ – குடும்ப உணர்வுகளுடன் களமிறங்கும் படம்

விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படமும் தீபாவளி வெளியீட்டுப் பட்டியலில் இணைந்துள்ளது. முதலில் அக்டோபர் 16-ம் தேதி வெளியாகும் எனத் திட்டமிடப்பட்டிருந்த இப்படம், பின்னர் நவம்பர் 6-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. மு. மாறன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் தந்தை – மகள் உறவை மையமாகக் கொண்ட குடும்ப உணர்வுகளும் ஆக்‌ஷன் அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. லிதன்யா சிவபாலன், ப்ரீத்தி அஸ்ரானி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Vijay Antony

ஏற்கெனவே பல்வேறு கதைக்களங்களில் நடித்துள்ள விஜய் ஆண்டனி, இந்தப் படத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சூர்யாவின் ‘Scene’ படத்துடன் ஒரே நாளில் வெளியாக இருப்பதால், இரு படங்களுக்கும் இடையிலான திரையரங்கப் போட்டி கவனிக்கத்தக்கதாக இருக்கும்.

”இங்க பாரு SJ சூர்யா ரொம்ப பண்றீங்க..” ரஜினியே ஷாக்கான மொமண்ட்!

4. பிரபுதேவாவின் ‘Moonwalk’ – 25 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா – ஏ.ஆர்.ரஹ்மான்

இந்தத் தீபாவளிக்கு நடனம், நகைச்சுவை மற்றும் இசை விருந்தாக அமையவுள்ள திரைப்படம் ‘Moonwalk’. பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் மனோஜ் என்.எஸ். இயக்கியுள்ளார். குறிப்பாக, சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபுதேவா – ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது இப்படத்தின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளதுடன், அனைத்து பாடல்களையும் பாடியுள்ளார். மேலும், படத்தில் அவரும் ஒரு கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். யோகி பாபு 16 வெவ்வேறு தோற்றங்களில் நடிப்பதும் படத்தின் தனித்துவமான அம்சமாகக் கூறப்படுகிறது.

Moonwalk

பாக்ஸ் ஆபிஸில் யாருக்கு வெற்றி?

நான்கு படங்களும் நவம்பர் 6-ம் தேதி வெளியாகும் நிலையில், ஒரே நாளில் இத்தனை படங்கள் போட்டியிடுவது திரையரங்க ஒதுக்கீடு, திரையிடல்களின் எண்ணிக்கை மற்றும் தொடக்க வசூல் ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

இதே நேரத்தில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது, மிக பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் `ராமாயணா' படத்தை. ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கியுள்ள இப்படம் நவம்பர் 5ம் தேதி வெளியாக உள்ளது. ஏ ஆர் ரஹ்மான் பிரபல ஹாலிவுட் இசையமைப்பாளரான ஹேன்ஸ் ஸிம்மருடன் இணைந்து இப்படத்தில் பணியாற்றியுள்ளார்.

இந்திப் படம் தான் என்றாலும், பல மொழிகளில் டப் செய்யப்பட்டு இந்தப் படம் வெளியாக இருப்பதால், தீபாவளி ரிலீஸில் மிகப்பெரிய படம் ராமாயணா தான். எனவே இந்தப் படங்களில் எல்லாமே சொன்னபடி வெளியாகுமா? என்பதும் கூட சற்று சந்தேகம் தான். இப்போதைக்கு, இந்தத் தீபாவளி கோலிவுட்டில் நட்சத்திரப் போட்டி, இசை, நகைச்சுவை, ஆன்மிகம், புராணம் எனப் பலவிதமான பொழுதுபோக்குகளுடன் களைகட்டத் தயாராக உள்ளது.

90ஸ் நடிகை சிவரஞ்சனி மகள் மேதா ஹீரோயினாக அறிமுகம்!

SAvsAUS| பேட்டிங் மட்டுமல்ல.. பந்துவீச்சிலும் வில்லனான ரென்ஷா! தோல்வியின் பக்கம் தென்னாப்ரிக்கா!
ஆஸ்திரேலியாவின் மேட் ரென்ஷா, பேட்டிங்கில் சதமடித்து அணியை 390 ரன்களுக்கு எடுத்துச்சென்றதுடன், பந்துவீச்சிலும் வில்லனாகி தென்னாப்பிரிக்காவின் கேப்டன் பவுமாவை அவுட்டாக்கினார். 421 ரன்கள் இலக்குடன் விளையாடும் தென்னாப்பிரிக்கா 102 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில், ஆஸ்திரேலியா வெற்றிக்கான வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளது.

தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் ஆஸ்திரேலியா அணி 3 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2-1 என தென்னாப்பிரிக்கா வென்ற நிலையில், இரண்டு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டர்பன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்றுவருகிறது.

Matt Renshaw

பரபரப்பாக நடைபெற்றுவரும் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி, தென்னாப்பிரிக்காவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 125 ரன்னுக்கே 6 விக்கெட்டுகளை இழந்தது. ஆனால் அங்கிருந்து தனியாளாக போராடி 190 ரன்கள் அடித்த ஆஸ்திரேலியா வீரர் மேட் ரென்ஷா அணியை 390 ரன்களுக்கு எடுத்துவந்தார்.

தொடர்ந்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 284 ரன்களுக்கு ஆல்அவுட்டானது. தொடர்ந்து 2வது இன்னிங்ஸில் விளையாடிய ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுக்கு 314 ரன்கள் அடித்து டிக்ளார் செய்தது.

Matt Renshaw gets the wicket of Temba Bavuma

Bavuma gone for 1 pic.twitter.com/pDE7u9PXao
— Pakistan Cricket Coach (@PakistanC36256) October 12, 2026

இந்தநிலையில் 421 ரன்கள் அடித்தால் வெற்றி என விளையாடிவரும் தென்னாப்பிரிக்கா அணி 4ஆம் நாள் ஆட்டமுடிவில் 102 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்துள்ளது. தென்னாப்பிரிக்காவின் நம்பிக்கையாக எய்டன் மார்க்ரம் 45 ரன்களுடன் களத்தில் நிற்கிறார். பேட்டிங்கில் சதமடித்த மேட் ரென்ஷா 4வது இன்னிங்ஸில் பந்துவீச்சிலும் கேப்டன் டெம்பா பவுமாவை அவுட்டாக்கி அசத்தினார். இது மேட் ரென்ஷாவின் முதல் டெஸ்ட் விக்கெட்டாகும். ஆஸ்திரேலியா அணியில் மற்ற ஸ்டார் வீரர்கள் அனைவரும் சொதப்பிய நிலையில், இந்த தொடரில் மேட் ரென்ஷா ஸ்டெப்அப் செய்துள்ளது ரசிகர்களிடையே கவனத்தை பெற்றுள்ளது.

9 ஆண்டுக்கு பின் சதம்.. ஆஸ்திரேலியாவை மீட்டெடுத்த மேட் ரென்ஷா! SA-வுக்கு பதிலடி!

நடைப்பயிற்சி மட்டும் போதாது! எலும்புகள் பலவீனமாவதைத் தடுக்க இதைச் செய்யுங்கள்!
எலும்புகள் பலவீனமாவதைத் தடுக்க ஸ்குவாட்ஸ், லஞ்செஸ், படிகள் ஏறுதல் போன்ற பயிற்சிகளை நடைப்பயிற்சியுடன் சேர்த்து செய்ய வேண்டும் என எலும்பியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

தினம் 15,000 அடிகள் வரை நீண்ட காலம் நடைபயிற்சி மேற்கொள்பவர்களுக்கும் 'ஆஸ்டியோபீனியா' (osteopenia) எனப்படும் எலும்பு அடர்த்தி குறைபாடு ஏற்படுவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். நடைபயிற்சி இதய ஆரோக்கியத்திற்கும் உடல் எடையைக் கட்டுப்படுத்தவும் சிறந்ததாக இருந்தாலும், 40 வயதிற்குப் பிறகு எலும்புகளின் அடர்த்தி மற்றும் தசைகளின் வலிமையைத் தக்கவைக்க வெறும் நடைபயிற்சி மட்டுமே போதாது என்று எலும்பியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Resistance training

எலும்புகள் மற்றும் தசைகள் பலமடைய எடைகளைத் தூக்கும் 'ரெசிஸ்டன்ஸ் பயிற்சி' (Resistance Training) மற்றும் 'லோடிங்' (Loading) பயிற்சிகள் மிகவும் அவசியமாகும். எனவே, தினமும் ஒரே வகையான நடைபயிற்சியைச் செய்யாமல், ஸ்குவாட்ஸ், லஞ்செஸ், படிகள் ஏறுதல், ஸ்ட்ரெச்சிங் மற்றும் உடலின் சமநிலையைத் தரும் பேலன்சிங் பயிற்சிகளையும் இணைத்துச் செய்ய வேண்டும் என்கின்றனர் எலும்பியல் நிபுணர்கள்.

அதீத டிஜிட்டல் பயன்பாடு : கண் பிரச்சனைகளைத் தவிர்க்க 20-20-20 விதி.. மருவத்துவர்கள் கூறுவது என்ன?

பிரதமருடன் முதல்வர் விஜய் சந்திப்பு : அடுத்த நாளே நடந்த அரசியல் மாற்றம்!
முதல்வர் விஜய் மற்றும் பிரதமர் மோடி சந்திப்பு நடந்த பின்னர், தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்லேகரை நியமனம் செய்த மத்திய அரசு. இந்த நடவடிக்கை அரசியல் சூழலில் கவனத்தை ஈர்த்தது.

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் தமிழ்நாட்டின் ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு தனி ஆளுநர் நியமிக்கப்படாத நிலையில், கேரள ஆளுநராக இருந்த ஆர்லேகர் தமிழ்நாட்டையும் சேர்த்து கூடுதலாக கவனித்து வந்தார்.

சட்டமன்றத் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. எனினும் அந்த கட்சியால் ஆட்சியமைக்க முடியாத நிலை இருந்ததால் பிற கட்சிகளின் ஆதரவை கோரின. அந்த சூழலில் ஆளுநரின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது.

மேலும் அமமுக எம்.எல்.ஏ ஒருவர் அணி மாறியதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆளுநரிடம் புகார் அளித்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்போது, தவெக தலைவர் விஜய் மீது குதிரை பேர குற்றச்சாட்டு அதிகமாக முன்வைக்கப்பட்டது. எனினும் இறுதியில் தவெக அரசுக்கு போதுமான எம்.எல்.ஏக்கள் ஆதரவு கிடைத்ததும் புதிய அரசுக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

தொடர்ந்து தவெக அரசுக்கும், ஆளுநர் ஆர்லேகருக்கும் இடையே சுமூகமான உறவே தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 11-ம் தேதி பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக தமிழ்நாட்டுக்கு வந்தார். அப்போது அரசு நிகழ்ச்சிகளில் பிரதமருடன் முதலமைச்சர் விஜய் கலந்துகொண்டார். அதுமட்டுமல்லாமல், அரசு சாராதா கோயில் வழிபாட்டிலும் மோடியுடன், விஜய் பங்கேற்றது தமிழ்நாட்டு அரசியலில் கவனம் பெற்றது.

இந்த சூழலில், பிரதமர் மோடி தமிழ்நாடு வந்து சென்ற அடுத்த நாளே தமிழ்நாட்டின் முழு நேர ஆளுநராக ஆர்லேகரை நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.

வரலாற்றில் இல்லாத அளவு மோசம்: 3 டிகிரி அதிகரித்த வெப்பநிலை | குளிர் காலத்தில் காத்திருக்கும் ஆபத்து!

யாரும் செய்யாததை செய்த விஜய்.. 'ராகுல் - விஜய் - மோடி' சந்திப்பில் நடந்தது என்ன?

90ஸ் நடிகை சிவரஞ்சனி மகள் மேதா ஹீரோயினாக அறிமுகம்!
90களின் பிரபல நடிகை சிவரஞ்சனியின் மகள் மேதா, தெலுங்கு சினிமாவில் ‘Mythri In Love’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படம் காதல், நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகிறது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நட்சத்திர தம்பதி நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் நடிகை சிவரஞ்சனி (ஊஹா). ஸ்ரீகாந்த் தெலுங்கு சினிமாவில் மிகப்பிரபலம், தமிழில் விஜய் நடித்த `வாரிசு' படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடித்தார். ஆனால் அவரது மனைவி சிவரஞ்சனி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய பிரபலம். `சின்ன மாப்பிள்ளை', `கலைஞன்', `ராஜதுரை', `அரண்மனை காவலன்', `வண்டிச்சோலை சின்னராசு' எனப் பல படங்களில் நடித்தார். 90களின் இறுதிக்கு பின் சினிமாவிலிருந்து விலகி குடும்பத்தை கவனித்து வருகிறார்.

Srikanth and Sivaranjini family

இந்த தம்பதியின் வீட்டிலிருந்து முதலில் அவரது மகன் ரோஷன் `Nirmala Convent' என்ற தெலுங்குப் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்போது அதே வீட்டிலிருந்து ஒரு ஹீரோயின் சினிமாவில் நுழைகிறார். அது ஸ்ரீகாந்த் - சிவரஞ்சனியின் மகளான மேதா. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ‘Mythri In Love’ படத்தின் மூலம் அவர் திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்குகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

நடிகை சிவரஞ்சனி மகள் மேதா

இப்படத்தில் மேதாவுக்கு ஜோடியாக ஜெய் ஜஸ்தி கதாநாயகனாக அறிமுகமாகிறார். இளைஞர்களின் காதல், உறவுகளுக்கு இடையிலான உணர்வுகள், நகைச்சுவை மற்றும் குடும்பப் பின்னணியைக் கலந்து உருவாகும் காதல் நகைச்சுவைப் படமாக இது இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘30 Weds 21’, ‘Middle Bench Ravi’ உள்ளிட்ட இணையத் தொடர்களை இயக்கிய பிரித்வி வனம் இப்படத்தின் மூலம் திரைப்பட இயக்குநராக அறிமுகமாகிறார். ‘Miss Shetty Mr Polishetty’, ‘Andhra King Taluka’ படங்களுடன் தொடர்புடைய மகேஷ் பாபு பி., இப்படத்தின் உருவாக்கத்தில் பங்கேற்கிறார். பாடலாசிரியர் ராமஜோகய்யா சாஸ்திரியின் மகன் சாய் ஹர்ஷா இசையமைக்கிறார்.

Here's to a new beginning, a beautiful story and falling in love all over again! ✨️

Pictures from the Pooja Ceremony of #MythriInLove ❤️

Introducing #JaiJasti and #MedhaMeka

Title Revealing Soon!

Produced by @MythriOfficial
Created by @filmymahesh
Directed by… pic.twitter.com/Cch2plG0yU
— Mythri Movie Makers (@MythriOfficial) October 12, 2026

நடிகர் ஸ்ரீகாந்த் – சிவரஞ்சனி தம்பதியின் மகன் ரோஷன் ஏற்கெனவே தெலுங்குப் படங்களில் நடித்து வரும் நிலையில், தற்போது மகள் மேதாவும் கதாநாயகியாக அறிமுகமாவது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.

ரஜினி சார் முன்னாடி.. நான் அப்படி பயந்ததில்ல! கை எல்லாம் நடுங்க ஆரம்பிச்சிடுச்சு! - வித்யா பாலன்

”இங்க பாரு SJ சூர்யா ரொம்ப பண்றீங்க..” ரஜினியே ஷாக்கான மொமண்ட்!

16 வயது சிறுமியிடம் அத்துமீறிய ரோபோ! ஜெர்மனியில் அதிர்ச்சி சம்பவம்!
ஜெர்மனியில் 16 வயது சிறுமியிடம் ரோபோ மூலம் பாலியல் அத்துமீறல் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளத்தில் நேரலையாக ஒளிபரப்பியதாக சந்தேகிக்கப்படும் இருவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ரோபோ மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

செய்தியாளர் - M.மீரா

ஜெர்மனியின் கொலோன் நகரில் இருக்கும் துரித உணவகம் ஒன்றின் வெளியே 16 வயது சிறுமி தனது நண்பர்களுடன் நின்றுகொண்டிருந்தார். அப்போது, சுமார் 1.2 மீட்டர் உயரமுள்ள சிவப்பு மற்றும் தங்க நிறத்திலான ரோபோ ஒன்று அவருக்குப் பின்னால் சென்று அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

ரோபோ

இந்தச் சம்பவத்தின்போது, ரோபோவின் 16 வயது உரிமையாளரும் அவருடன் இருந்த 19 வயது இளைஞரும் சம்பவத்தைத் தங்களது செல்போன்களில் படம்பிடித்துள்ளனர். மேலும், இதனைச் சமூக வலைதளத்தில் நேரலையாக ஒளிபரப்பியுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து நடந்த விசாரணையில் ஒரு காரின் பின்பகுதியில் ரோபோ மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, ரோபோ மற்றும் சந்தேக நபர்களுக்குச் சொந்தமான இரண்டு செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்து தீவிர விசாரணை செய்து வருகிறார்கள். இந்தச் சம்பவம் ஆன்லைன் பாதுகாப்பு மற்றும் சைபர் சட்டங்கள் குறித்து உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

German police are reportedly investigating an incident in Cologne where a robot allegedly touched a 16-year-old girl inappropriately.

The robot and two phones were seized as investigators examine whether its movements were deliberately controlled.#Robotics #Germany #Technology pic.twitter.com/52uVYeUKYw
— Cyrus (@Cyrus_In_The_X) October 12, 2026

சிறுமிகளை இலக்காகக் கொண்டு அதிநவீன தொழில்நுட்பங்களும் ரோபோக்களும் தவறாகப் பயன்படுத்தப்படுவது அதிகரித்து வருவதாக சமூக வலைதளங்கள் மற்றும் இணைய வழிக் குற்றங்களைக் கண்காணிக்கும் அமைப்புகள் எச்சரித்துள்ளனர்.

Roboter »Ahmed« fasst einer 16-Jährigen auf den Kölner Ringen von hinten ans Gesäß und führt Stoßbewegungen aus.

Der 16-jährige Besitzer aus Wegberg und sein 19-jähriger Begleiter haben den Vorfall gefilmt, live gestreamt und moderiert haben.

Die Polizei fand das Gerät kurz… pic.twitter.com/TsWIrTa29V
— Dara  (@Raeubertochtah) October 12, 2026

‼️BREAKING: German police seized a robot that sexually assaulted a 16-year-old girl by touching her ass and making thrusting motions at her.

Officers found it stashed in the boot of a Volkswagen.

Its 16-year-old owner and a 19-year-old companion allegedly livestreamed it. pic.twitter.com/MTUBuXcgtT
— International Cyber Digest (@IntCyberDigest) October 12, 2026

2100-ல் உலகமே அழியும்... அச்சுறுத்தும் 17 பேராபத்துகள்! விஞ்ஞானிகள் விடுத்த பகீர் எச்சரிக்கை!

6 அதிமுக MLA-க்கள் ராஜிநாமா விவகாரம்.. சபாநாயகர் நடவடிக்கை செல்லும் என நீதிமன்றம் உத்தரவு!
அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா விவகாரத்தில் சபாநாயகர் நடவடிக்கை சட்டப்படி செல்லுபடியானது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தகுதிநீக்க நடவடிக்கையை விரைவில் முடிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொறடா உத்தரவை மீறி, தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததற்காக, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மதுராந்தகம் - மரகரம் குமரவேல், தாராபுரம் - சத்தியபாமா, அம்பாசமுத்திரம் - இசக்கி சுப்பையா, பெருந்துறை - ஜெயக்குமார், கரூர் - எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை - சி.விஜயபாஸ்கர் ஆகிய ஆறு பேருக்கு எதிரான தகுதிநீக்க நடவடிக்கை நிலுவையில் உள்ளது.

மரகதம் குமரவேல் - விஜய்

இந்நிலையில், அவர்களின்  ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்எல் ரவி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்குகளை, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.

4 தரப்பு வாதம் என்ன?

அக்ரி கிருஷ்ணமூர்த்தி தரப்பில், இந்த வழக்கில் சபாநாயகர், ராஜினாமா செய்தவர்களிடம் சுயமாக பதவி விலகினார்களா என விசாரணை நடத்தி, திருப்தியடைந்த பின், ஏற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால், அர்த்தமுள்ள எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.

ராஜினாமா கடிதங்களை அளித்த சில நிமிடங்களில், தலைமைச் செயலகத்தில் அமைச்சரை சந்தித்து தவெகவில் இணைந்திருக்கின்றனர். ஆனால் இதுசம்பந்தமாக சபாநாயகர் முழுமையான விசாரணை நடத்தாமல், ராஜினாமாவை ஏற்றுக் கொண்டுள்ளார். ராஜினாமாவை ஏற்கும் முன், தகுதிநீக்க புகார் அளித்த மனுதாரரான அக்ரி கிருஷ்ணமூர்த்திக்கு எந்த நோட்டீசும் அனுப்பப்படவில்லை. குதிரை பேரம் நடந்துள்ளது குறித்து ஆளுநருக்கும் புகார் அளிக்கப்பட்டது எனச் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்தசூழலில் சபாநாயகர் தரப்பில் தெரிவித்ததாவது, ராஜினாமா ஏற்றுக் கொண்டதால், தகுதிநீக்க நடவடிக்கை இல்லாமல் ஆகி விடாது. ராஜினாமாவை ஏற்றது சட்டப்படி செல்லுபடியானது தான். ஒரு எம்.எல்.ஏ. ராஜினாமா செய்ய விரும்பினால், பதவியில் நீடிக்கும்படி நிர்பந்திக்க முடியாது. உறுப்பினர்களின் ராஜினாமாவை ஏற்காவிட்டால் அது அரசியல் சாசன கடமையை செய்யத் தவறியதாகி விடும்.

சுய விருப்பப்படி ராஜினாமா செய்தாரா என்பதை மட்டும் தான் விசாரிக்கமுடியும். அமைச்சர் பதவி, பணத்துக்காக ராஜினாமா செய்தார்களா, குதிரைபேரம் நடந்ததா என்பதை தகுதிநீக்க நடவடிக்கையில் தான் விசாரிக்க முடியும். ராஜினாமாவின் நோக்கம் என்ன என்பதை, ராஜினாமாவை ஏற்கும் போது விசாரிக்க முடியாது. சபாநாயகர் எந்த விதிமீறலும் செய்யவில்லை. இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.

மரகதம் குமரவேல்

ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் தரப்பில், எம்.எல்.ஏ.வாக இருந்து சலுகைகளை பெற்றுக் கொண்டு வேறு கட்சிக்கு ஆதரவளித்தால் தான் ஊழல் நடவடிக்கை. எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு, வேறு கட்சிக்கு இணைவது, ஜனநாயக அரசியல். எம்.எல்.ஏ.வின் ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதால், தகுதி நீக்க நடவடிக்கையை தன்னிச்சையாக செல்லாததாக்கி விடாது. எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமா உண்மையானவை; சுய விருப்பப்படி அளிக்கப்பட்டவை.

நேரில் சந்தித்து, கைப்பட எழுதி அளித்த ராஜினாமா கடிதத்தின்  உண்மைத்தன்மையை சந்தேகிக்க முடியாது. எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை தொகுதி மக்கள் தான் கேள்வி கேட்க முடியும் என வாதிடப்பட்டது.

சட்டப்பேரவை செயலாளர் தரப்பில், உண்மையாக , சுய விருப்பத்தின் அடிப்படையில் எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகல் கடிதம் அளித்தால், அதை சபாநாயகர் ஏற்காமல் இருக்க முடியாது எனத் தெரிவிக்கப்பட்டது.

சபாநாயகர் நடவடிக்கை செல்லும் என உத்தரவு!

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்குகளின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர். இந்த நிலையில், இந்த வழக்குகளில் தலைமை நீதிபதி அமர்வு இன்று காலை தீர்ப்பளித்துள்ளது.

உத்தரவின் படி, 6 அதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்றும், தகுதி நீக்க நடவடிக்கை பற்றி 2 மாதங்களில் சபாநாயகர் முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அதிமுகவில் எம்எல்ஏவாக இருந்து ராஜிநாமா செய்த சத்தியபாமா, மரகதம் இருவரும் தற்போது இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்களாக நின்று வெற்றிபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.